தொப்பை கொழுப்பு கரைய, உடல் எடை குறைய... இந்த ‘மேஜிக்’ உணவுகள் உதவும்

Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பதில், நம் சமையலறை பல பொக்கிஷங்கள் நிறைந்துள்ள ஒரு புதையல் என்றே கூறலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 12, 2023, 01:29 PM IST
  • நம் சமையலில் பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகின்றன.
  • இவற்றை சாப்பிடுவதன் மூலம், உடல் எடை குறைப்பதில் பயனுள்ள நன்மைகள் கிடைக்கின்றன.
  • நம் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதில் இவை நல்ல விளைவுகளை காட்டுகின்றன.
தொப்பை கொழுப்பு கரைய, உடல் எடை குறைய... இந்த ‘மேஜிக்’ உணவுகள் உதவும் title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. எனினும் சில எளிய வழிமுறைகளின் மூலம் நம் உடல் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். அப்படி ஒரு எளிய வீட்டு வைத்தியம் (Home Remedy) பற்றி இந்த பதிவில் காணலாம்.

சமையலறை தீர்வுகள் (Kitchen Hacks)

நம் தொப்பை கொழுப்பை கரைத்து (Belly Fat) உடல் எடையை குறைப்பதில், நம் சமையலறை பல பொக்கிஷங்கள் நிறைந்துள்ள ஒரு புதையல் என்றே கூறலாம். நம் சமையலில் பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகின்றன. இவற்றை சாப்பிடுவதன் மூலம், உடல் எடை குறைப்பதில் பயனுள்ள நன்மைகள் கிடைக்கின்றன. நம் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதில் இவை நல்ல விளைவுகளை காட்டுகின்றன.  நம் சன்றாட சமையலில் பயன்படும் பல பொருட்கள் உடல் பருமனை குறைக்க உதவுகின்றன. நம் உடல் எடையை குறைப்பதில் மிக அதிக அளவில் நன்மை அளிக்கக்கூடிய சில நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கான வீட்டு வைத்தியம் (Home Remedy For Weight Loss) 

வெந்தயம் 

வெந்தயம் (Fenugreek Seeds) கொலஸ்ட்ராலைக் குறைப்பது முதல் து எடை இழப்பு வரை பல பலன்களைக் கொண்டுள்ளது. இந்த தானியங்களை வெவ்வேறு வழிகளில் உணவில் சேர்க்கலாம். இருப்பினும், எடை இழப்புக்கு வெந்தய விதைகளை இரண்டு வழிகளில் உட்கொள்வது மிகவும் சிறப்பான வழியாக கருதப்படுகின்றது. வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம். அல்லது ஊறிய விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு தேநீர் போல் அருந்தலாம். இதன் மூலம் எடை குறையும், தொப்பை கொழுப்பும் கரையும். 

பூண்டு

உடல் எடையை குறைக்க பூண்டும் (Garlic) சாப்பிடலாம். பூண்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதில் விளைவைக் காட்டுகிறது. தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிடலாம். இது தவிர, காய்கறிகள், சாலடுகள் மற்றும் சூப்களில் சேர்த்தும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | இத்துணூண்டு புளிக்குள்ள இத்தனை மாயமா? ஆரோக்கியத்தை அள்ளித் தரும் புளியம்பழம்

இலவங்கப்பட்டை

அரை முதல் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை (Cinnamon) எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இந்த தண்ணீரை தினமும் உட்கொள்வதால், உடல் பருமன் குறையத் தொடங்குகிறது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றம், கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை தொடர்பான நன்மைகளை வழங்குகிறது.

இஞ்சி

உடலில் வலி இருந்தாலோ, வயிறு உப்பச பிரச்சனை இருந்தாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க விரும்பினாலோ இஞ்சியை உட்கொள்ளலாம். இஞ்சியின் கொழுப்பை எரிக்கும் பண்புகள் அவற்றின் விளைவை விரைவாகக் காட்டுகின்றன. இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை தேநீர் போல் பருகவும்.

சீரகம்

எடையைக் குறைக்க சீரக (Cumin Seeds) நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த தண்ணீரை தயாரிக்க, அரை தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வெதுவெதுப்பான பதத்தில் குடிக்கவும். சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரையும் காலையில் குடிக்கலாம். 

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை சுமூகமாக தீர்க்க 9 உணவுகள்! நல்ல கொழுப்புக்கு கேரண்டி தரும் டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News