உடல் பருமனால் அவதியா? கொய்யாவை இப்படி சாப்பிடுங்க... உடனே எடை குறையும்

Guava For Weight Loss: கொய்யாவின் மிக முக்கியமான நன்மை ஒன்று உள்ளது. கொய்யாவை சாப்பிட்டால் உடல் எடையும் குறையும் என்பது தெரியுமா?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2023, 12:07 PM IST
  • எடை இழப்பு குறிப்புகள்.
  • உடல் எடை குறைப்பதில் கொய்யா எப்படி பயன் தரும்?
  • எடை இழப்புக்கு கொய்யா சாப்பிடுவது எப்படி?
உடல் பருமனால் அவதியா? கொய்யாவை இப்படி சாப்பிடுங்க... உடனே எடை குறையும் title=

எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன் என்பது இந்நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரித்த எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. பலர் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுத்தாலும், இதை செய்ய பல இயற்கையான மற்றும் எளிய வழிகளும் உள்ளன. அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காண்லாம்.

எடை இழப்புக்கு கொய்யா சாப்பிடலாம்: கொய்யா பலருக்கு பிடித்த ஒரு இனிமையான பழமாகும். இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், குளிர்கால வெயிலில் அமர்ந்து உண்பதில்தான் இதன் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. எளிதில் கிடைக்கும் இந்தப் பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்றும் அழைப்பர். மக்கள் இதை காய்கறி, சட்னி மற்றும் சாலட் என பல வழிகளில் உட்கொள்கிறார்கள். கொய்யா சாப்பிடுவது குமட்டல் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. 

ஆனால் கொய்யாவின் மிக முக்கியமான நன்மை ஒன்று உள்ளது. கொய்யாவை சாப்பிட்டால் உடல் எடையும் குறையும் என்பது தெரியுமா? ஆம், கொய்யாவில் காணப்படும் அத்தியாவசிய பண்புகள் எடை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதற்கு கொய்யாவை சரியாக உட்கொள்வது அவசியம். உடல் எடையை குறைக்க கொய்யாவை எப்படி உட்கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை குறைப்பதில் கொய்யா எப்படி பயன் தரும்?

கொய்யாவில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளைப் பெறுவது தவிர்க்கப்படுகின்றது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. இதன் காரணமாக எடை இழப்பு உணவுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இதன் காரணமாக இதை முழுமையாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால் அடிக்கடி பசியும் எடுக்காது. ஆகையால், நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவு வகைகளை அவ்வப்போது உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க இது உதவுகிறது.

எடை இழப்புக்கு கொய்யா சாப்பிடுவது எப்படி?

கொய்யாவை சாப்பிடும்போது அதை தோலுடனேயே சாப்பிடுவது நல்லது. ஏனெனில் செரிமானத்திற்கு தேவையான அத்தியாவசிய பண்புகள் அதன் தோல்களில் காணப்படுகின்றன. உடல் எடையை குறைக்க உதவும் சில கொய்யா ரெசிபிகளை இங்கே காணலாம்.

மேலும் படிக்க | பதற்றம், கவலைகளை ஓட விரட்டும் ‘சூப்பர்’ உணவுகள்!

கொய்யா ஸ்மூத்தி

கொய்யா ஸ்மூத்தி குடிப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதற்கு 2 கொய்யாப்பழம் மற்றும் 4 ஸ்ட்ராபெர்ரிகளை மிக்ஸி ஜாரில் போடவும். இதனுடன், அதில் 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 கப் பால் சேர்த்து அரைக்கவும். அரைத்து, ஸ்மூத்தி தயார் செய்து உட்கொள்ளுங்கள். 

கொய்யா மற்றும் புதினா சாறு

கொய்யா மற்றும் புதினா சாறு செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் 2 கொய்யா, அரை வெள்ளரி, சில புதினா இலைகள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து அரைத்து, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து சாறு தயார் செய்து பருகவும். 

கொய்யா சட்னி

கொய்யா சட்னி தயார் செய்ய, 250 கிராம் கொய்யாவை பொடியாக நறுக்கவும். இப்போது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கொத்தமல்லி இலைகள், 2 பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கு உப்பு ஏற்ப சேர்க்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது உங்கள் சட்னி பரிமாற தயாராகிவிடும். 

இந்த ரெசிபிகளின் படி கொய்யாவை உட்கொள்வதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். ஆகையால், இவற்றை உங்கள் எடை இழப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இளைஞர்களை குறி வைக்கும் 'ஹார்ட் அட்டாக்'... இந்த 10 விஷயங்களில் கவனம் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News