நெய் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும், அதனால் சில பின்விளைவுகளும் இருக்கின்றன. வெறுமனே நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ற தகவல்களை பார்த்துவிட்டு நெய் சாப்பிட்டால், உங்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொருவரின் உடல் நிலைமையை பொறுத்தே நெய் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்கள் உடல் பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ளாமல் நெய் சாப்பிட்டு வந்தால் சீரான இடைவெளியில் மிக மோசமான பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
முதலில் நெய்யில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன?, அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பார்க்கலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக பரிந்துரைக்கப்படும் நெய்யில், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இது சரியான செரிமானத்தை சீராக்கஉதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் நெய் சாப்பிடுவதால் வரும் பின்விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்க
உடல் பருமன் அதிகரிக்கும்
நெய்யில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான நெய் அதிகப்படியாக சாப்பிடும்போது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் ஏற்கனவே உடல் பருமனால் போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாலோ, நெய்யைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதிக அளவு நெய்யை உட்கொள்வது உங்கள் கலோரி நுகர்வை அதிகரிக்கும். இதன்பிறகு எடையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
இதய பிரச்சனை
நெய்யில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதய நோய் அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள் நெய்யை உட்கொள்வதை குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது அவர்களின் நிலையை மோசமாக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு குறைந்த அளவு நெய்யை உட்கொள்வது மட்டுமே சிறந்தது. நெய் சாப்பிடுவது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது இன்னும் சிறந்தது.
கல்லீரல் பிரச்சனை
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். நெய்யில் அதிக அளவு கொழுப்பு உள்ளது, இதன் காரணமாக கல்லீரல் அதை ஜீரணிக்க கூடுதல் கடினமாக உழைக்க வேண்டும். இது கல்லீரலின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நாளடைவில் கல்லீரல் நிலை மோசமாகி பெரிய சிக்கலில் கொண்டு வந்து நிறுத்திவிடும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள்
நெய்யை அதிகமாக உட்கொள்வது அஜீரணம், அமிலத்தன்மை அல்லது பிற வயிற்று பிரச்சனைகளை அதிகரிக்கும். வயிற்றில் அடிக்கடி பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை குறைவாகவே உட் கொள்ள வேண்டும். உட்கொள்ளாமல் இருப்பதும் நல்லது தான்.
நெய் சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு
நெய் சாப்பிடுவதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன. எவ்வளவு சாப்பிட வேண்டும்?, எந்தெந்த உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும், வெறும் நெய்யை சாப்பிடலாமா?, நெய்யை காலையில் சாப்பிடலாமா?, அல்லது இரவில் சாப்பிட வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொண்டு அதன்பிறகு சாப்பிடுவது குறித்து முடிவெடுக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ