தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு என்பது பலரது வாழ்க்கையை நிலை குலைய செய்து விடுகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம். அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால், வயதானவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.
தற்போதுவாழ்க்கையில் கடின உழைப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. எல்லாவற்றிலும் இயந்திரங்கள் நம்மை ஆக்கிரமித்துள்ளன. அதனால், உடல் பருமன், கொலஸ்டிரால் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. நாம் வசிக்கும் அப்பார்மெண்டுகள், அலுவலகங்கள் என அனைத்திலும் லிஃப் வசதியை காணலாம். அவசர வாழ்க்கை காரணமாக பலர் படிக்கட்டுகளில் ஏறுவதை விட லிப்டை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் படிக்கட்டுகளில் ஏறுவதால் உடல் எடை வேகமாக குறைவதோடு மட்டுமல்ல, வேறு பல நன்மைகளும் கிடைக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று இதய அரோக்கியம்.
படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். உடல் பருமனை வேகமாக குறைக்கவும் உதவுகிறது. படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை தவற விடாதீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போதும், அலுவலகம் சென்றதும் லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைத் பயன்படுத்தவும். ஆரம்பத்தில், படிக்கட்டுகளில் ஏறும் போது சோர்வாக இருக்கலாம், மூச்சுத் திணறலும் ஏற்படலாம், ஆனால் அதனை தொடர்ந்து செய்து வந்தால், மூச்சு வாங்குதல், திணறுதல் போன்றவை இருக்கவே இருக்காது.
படிக்கட்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்
1. தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும் என்கிறது ஓர் ஆய்வு.
2. படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் இதயம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
3. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் நீக்குகிறது.
4. தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை வழக்கமாக கொண்டால், உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.
5. தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், ஒருவரின் இறப்பு விகிதத்தை 33 சதவீதம் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.
படிக்கட்டுகளில் ஏறும் போது கடைபிடிக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள்
1. முதலிலிலே வேகமாக ஏறாமல், மிதமான வேகத்தில் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்குங்கள். போக போக சிறிது வேகத்தை கூட்டலாம். ஆனாலும், அதிக வேகம் தேவையில்லை.
2. படிக்கட்டுகளில் ஏறும் போது முதுகு நேராக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3. முதலில் 20 அல்லது 25 படிக்கட்டுகளில் 5 தடவை ஏறி இறங்கலாம். பிறகு நீங்கள் ஏறக்கூடிய படிக்கட்டுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும்.
4. கால்களில் பாதிப்பு ஏதும் ஏற்படுவதை தவிர்க்க பொருத்தமான காலணிகளை அணியுங்கள்.
( பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்டிராலை எரிக்கும் ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ