புதுடெல்லி: கொரோனா வைரஸ் அதாவது கோவிட் -19 பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, தான் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ட்விட்டரில் கூறியுள்ளார்.
"டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் வந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்களின் 28 லட்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில், அதிகபட்சமாக 69,652 பேருக்கு புதிய தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 53,866 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 977 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மொத்த தொற்று எண்ணிக்கை 28,36,926 ஆக உள்ளது. இதில் 6,86,395 பேர் ஆக்டிவ் நோயாளிகள். 20,96,665 குணமடைந்துள்ளனர். 53,866 பேர் இறந்துள்ளனர்.
புதன்கிழமை, 9,18,470 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூறியது. ஆகஸ்ட் 19 வரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கையை 3,26,61,252 என ஐசிஎம் ஆர் மேலும் தெரிவித்துள்ளது
மகாராஷ்டிரா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக உள்ளது. மொத்தம் 1,56,920 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 4,37,870 பேர் குணமாகியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 20,687 ஆகும்.
அதைத் தொடர்ந்து தமிழகம் 53,860 ஆக்டிவ் நோயாளிகளுடன், இரண்டாம் இடத்தில் உள்ளது. 2,89,787 பேர் குணமாகியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 6,007.
ALSO READ | தூய்மையான நகரங்களின் பட்டியலில் 4-வது முறையாக முதலிடம் பிடித்த இந்தூர்!!
ஆந்திராவின் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 85,130 ஆகவும், குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,18,311 ஆகவும் உள்ளது. 2,820 பேர் இறந்துள்ளனர்.
டெல்லியில் மொத்தம் 11,068 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர், 1,39,447 பேர் குணமாகியுள்ளனர். 4,226 பேர் இறந்து விட்டனர்.
ALSO READ | டெல்லியில் 28% மக்கள் COVID-19 க்கு ஆளாகியுள்ளனர், வெளியான அதிர்ச்சி தகவல்