காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவாகும். ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் உண்ணும் உணவுகள், அன்று முழுவதும் நமக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் வழங்குவதாக இருக்க வேண்டும். பல ஆய்வுகள் காலை உணவை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைக் எடுத்துக் காட்டுகின்றன. இது உங்கள் ஆற்றலையும் சக்தியையும் மேம்படுத்துகிறது. எனவே காலை உணவு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதோடு, எதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.
உடல் நலம் மற்றும் நல்வாழ்வுக்கு காலை உணவு மிக அவசியமாக உள்ள நிலையில், சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவுகளை தெரிந்து கொள்ளலாம். இவற்றை சாப்பிட்டால் உங்கள் எடை இழப்பு முயற்சி அனைத்தும் பாழாகி விடும்.
குளிர்பானங்கள்
காலை வேளையில் குளிர்பானங்கள் அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது மட்டுமின்றி உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். குளிர்பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பது அமிலத்தன்மை, இரைப்பை பிரச்சனைகள், குமட்டல் போன்றவையும் ஏற்படுத்தும். அதே போன்று காலையில் குளிர்ந்த காபி அல்லது குளிர்ந்த தேநீர் போன்ற குளிர் பானங்களை குடிப்பதும் உங்கள் செரிமானத்தை மிகவும் பாதிக்கும். எனவே இது போன்ற பானங்களுக்கு கண்டிப்பாக நோ சொல்லி விடவும்.
காரமான உணவுகள் மற்றும் பொரித்த உணவுகள்
காலையில் காரமான உணவைத் தவிர்க்கவும், அது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அமிலத்தன்மைக்கும் வழிவகுக்கிறது. அதே போன்று பொரித்த உணவுகளும் கண்டிப்பாக கூடாது. சிலருக்கு காபி டீயுடன் பொரித்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
காய்கறி சாலட்
பச்சையாக காய்கறி சாலட் சாப்பிடுவது கண்டிப்பாக உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும், இவற்றை ஒருபோதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. பச்சைக் காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைத்து வயிற்று வலி, அமிலத்தன்மை போன்றவற்றை உண்டாக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உருவாகும். இந்த பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை என்றாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மெட்டபாலிசம் அதிகரிக்கும் உணவுகள் / பானங்கள்
காலையில் வெதுவெதுப்பான தண்ணீர், லெமன் டீ அல்லது இஞ்சி டீ குடிக்கவும். இவ்வாறு செய்வதால் உங்கள் மெட்டபாலிசம் அதிகரிக்கும். உலர் பழங்கள் ஊறவைத்த கொட்டைகள் மற்றும் வெதுவெதுப்பான நீருடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். கொஞ்சம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வழக்கமான உணவு மற்றும் பழக்கத்தை தொடரலாம். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஆச்சரியமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ