Symptoms of Fatty Liver: நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உடலின் அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் செயல்பட வேண்டும். நமது உடலில் இருக்கும் உறுப்புகளில் சில உறுப்புகள் மிக முக்கியமானவையகவும், அத்தியாவசியமாகவும் உள்ளன. அப்படிப்பட்ட முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இது உடலுடன் தொடர்புடைய பல செயல்பாடுகளை செய்கிறது.
கல்லீரல் செரிமானம் முதல் இரத்தத்தை வடிகட்டுதல் வரை அனைத்திலும் பெரிதும் உதவுகிறது. ஆகையால் உடல் ஆரோக்கியத்திற்கு, கல்லீரலை ஆரொக்கியமாக வைத்துக்கொள்வதும் மிக அவசியமாகும். இருப்பினும், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் பெரும்பாலும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன. கொழுப்பு கல்லீரல் இந்த பிரச்சனைகளில் ஒன்று. பலர் இந்த நாட்களில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலை ஹெபடிக் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு குவிவதால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. இந்த நிலை காரணமாக, கல்லீரலில் வீக்கம் ஏற்படுவதோடு கல்லீரலில் சேதமும் ஏற்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சில அறிகுறிகளின் (Fatty Liver Signs) உதவியுடன் சரியான நேரத்தில் அடையாளம் காணலாம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் சில முக்கியமான அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்:
பலவீனம்
எந்த காரணமும் இல்லாமல் பலவீனமான (Tiredness) உணர்வு இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையாக இருக்கலாம். ஊட்டச்சத்துக்களை செயலாக்குவதிலும், உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதிலும் கல்லீரலின் பங்கு அதிகமாக உள்ளது. இது உடலின் ஆற்றல்களை மேம்படுத்த முக்கியமானது.
மஞ்சள் காமாலை
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை அதிகரிக்கும் போது, பிலிரூபின் என்ற ஒரு மஞ்சள் நிறமி இரத்தத்தில் சேரத் தொடங்குகிறது. இது கண்களின் தோல் மற்றும் வெள்ளை நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றுகிறது. மஞ்சள் காமாலை கொழுப்பு கல்லீரல் நோய் உட்பட கல்லீரல் செயலிழப்புக்கான ஒரு அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.
பசியின்மை
திடீரென்று பசி குறைவதை (Hunger) உணரத் தொடங்கினால், அது கொழுப்பு கல்லீரல் அறிகுறியாக இருக்கலாம். வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக பசியின்மை ஏற்படுகின்றது.
சோர்வு
போதுமான ஓய்வு எடுத்த பின்னரும் ஒருவர் தொடர்ந்து சோர்வாக (Fatigue) இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோயின் தொடக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சோர்வு, ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் மோசமான கல்லீரல் செயல்பாடுக்கு காரணமாக அமையலாம்.
எடையில் ஏற்றத்தாழ்வு
காரணமே இல்லாமல் எடையில் ஏற்படும் மாற்றங்கள், கொழுப்பு கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரல் செயலிழப்பினால் ஏற்படும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உடல் எடையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.
மேல் வயிற்றில் வலது பக்கத்தில் அசௌகரியம்
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, கல்லீரல் இருக்கும் வயிற்றின் மேல் வலது பக்கத்தில் லேசான வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம். இந்த அசௌகரியம் கல்லீரலின் வீக்கத்துக்கான அறிகுறியாக இருக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ