Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!

டிமன்ஷியா எனப்படும் மறதி நோய், இளம் வயதினரையும் தாக்கும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 12, 2023, 05:23 PM IST
  • மறதி நோய், 65 வயதிற்கு மேற்பட்டோருக்குதான் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது.
  • இளம் வயதினருக்கு வரும் டிமன்ஷியாவிற்கு பெயர் யங்கர் செட் டிமன்ஷியா.
  • இளம் வயதினருக்கும் டிமன்ஷியா வர வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..! title=

அல்சைமர், டிமன்ஷியா போன்ற மறதி நோய்கள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்குத்தான் வரும். அரிதிலும் அரிதாக நடுத்தர வயதினரையும் இந்த நோய் தாக்கும். ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இளம் வயதினரையும் இந்த மறதி நோய் தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

டிமன்ஷியா என்றால் என்ன? 

டிமன்ஷியா எனப்படுவது, மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள காயம் ஆகியவற்றால் உண்டாகும். இது ஒரு தனி நோய் அல்ல. இது ஒரு கூட்டு நோய். மூளையில் பாதிப்பினை ஏற்படுத்தும் அல்சைமர்ஸ் போன்ற நோய்களினால் வருவதுதான் டிமன்ஷியா. 65 வயதினை கடந்தவர்கள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

டிமன்ஷியாவின் அறிகுறிகள்:

டிமன்ஷியா வந்துவிட்டால் நமது சிந்தனை திறன் பாதிக்கும். நினைவாற்றலை இழக்கக் கூடும். நாம் பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து விடிவோம். சமீபத்திய நிகழ்வுகள் கூட எதுவுமே ஞாபகம் இருக்காது. தெரிந்த இடத்திற்கு கூட பாதை மறந்து போகும். தெரிந்த ஒரு பொருளை குறிப்பிடுவதற்கு கூட, வேறு ஏதோ ஒரு பெயரை பயன்படுத்துவோம். 

மேலும் படிக்க | சட்டுபுட்டுனு எடை குறையணுமா? காலை உணவில் இவற்றை சாப்பிட்டால் போதும்!!

இளம் தலைமுறையினருக்கும் மறதி நோய்?

அதிக வயதுடையோருக்குத்தான் இவ்வகையான மறதி நோய் வருவது இயல்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தினாலும் வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் 65 வயதிற்கு கீழே உள்ளோருக்கும் மறதி நோய் வரக்கூடும் என ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளம் வயதுடையோரை அதிகளவில் தாக்க வாய்ப்பில்லை என்றாலும், அவர்களுக்கு இந்நோய் வரக்கூடும் என சில மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இளம் தலைமுறையினருக்கு வரும் மறதி நோயின் பெயர், Younger Onset Dementia என கூறப்படுகிறது. 

யங்கர் ஆன்செட் டிமன்ஷியா என்றால் என்ன? 

இளம் வயதினருக்கு டிமன்ஷியா வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என சில ஆய்வுகள் கூறினாலும், அதை உறுதிப்படுத்தும் அளவிற்கு சரியான சான்றுகள் இன்னும் பெறப்படவில்லை. இறுப்பினும், அப்படி இளம் வயதிலேயே மறதி நோயினால் பாதிக்கப்படுவதற்கு மரபியல் ரீதியான காரணங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி தலையில் அடிப்பட்டது, பக்கவாத நோய், நச்சு தன்மை அடங்கிய ஏதாவது ஒரு பொருளை உபயோகித்தது என பல காரணங்கள் இதற்காக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வும் பல நிறுவனங்களின் தரப்பில் நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. 

சிறுவயது டிமன்ஷியாவிற்கான அறிகுறிகள்:

  • தினசரி வாழ்வில் அதிக மறதி ஏற்படுதல். 
  • குழப்பமான மனநிலையுடன் இருத்தல். 
  • தெரிந்த வேலையை செய்வதற்கும் சிரமப்படுதல். 
  • செய்ததையே திரும்ப செய்தல்.
  • குடும்பம் மற்றும் நண்பர்களிடத்திலிருந்து விலகி இருத்தல்.
  • தெளிவாக சிந்திக்கும் திறனை இழத்தல்.
  • பேசுவதில் கோளாறு ஏற்படுதல்.
  • நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகள் பிற மனநிலை சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஆனால் இவையும் டிமன்ஷியாவின் அறிகுறிகள் என அங்கீகரிக்கப்பட்ட ஊடக தளங்கள் சில தெரிவித்துள்ளன. 

மேலும் படிக்க | ஹேர் டை பண்ணாமலேயே நரை முடியை கருப்பாக்கலாம், இதை மட்டும் பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News