10.52 லட்சம் போலி பான் கார்டுகள்: சுப்ரீம் கோர்ட்

Last Updated : Jun 11, 2017, 04:14 PM IST
10.52 லட்சம் போலி பான் கார்டுகள்: சுப்ரீம் கோர்ட் title=

வருமானவரி தாக்கல் செய்வதற்கும், பான் கார்டிற்கு விண்ணப்பிப்பதற்கும் ஆதார் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவ்வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பான் எண் பெற ஆதார் அவசியமில்லை என தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி தாக்கல் செய்யவும், பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 1 வரை ஆதார் அவசியம் இல்லை. 

அதன் பிறகு ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது.இதற்கிடையில் நேற்று முன்தினம் தடை விதிப்பதற்க முன் சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்துக்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பெஞ்ச் கூறுகையில், இதுவரை 11.35 லட்சம் போலி பான் காடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது. இதில் 10.52 லட்சம் பார் எண்கள் தனிநபர்களால் பெறப்பட்டுள்ளது. 0.4 சதவீதம் என்று மத்திய அரசு கூறுகிறது. எங்களுக்கு சதவீதம் முக்கியமல்ல. எண் அடிப்படையில் பார்த்தால் 1.52 லட்சம் போலி பான் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை சிறிய அளவாகவோ, இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பாடும் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. இத்தனை போலி பான் கார்டுகள் புழக்கத்தில் இருக்கையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதும், வருமான வரி செலுத்த அது அவசியம் என்பது எப்படி சரியாக வரும். 

இந்த போலி பான் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதாரை கொண்டு எவ்வாறு கறுப்பு பணம் மற்றும் பண மோசடியை தடுக்கவோ, கண்டறியவோ முடியும் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளது.

Trending News