ஒடிசா மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 7 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
ஒடிசா மாநிலம் தென்கால் மாவட்டம் கமலங்கா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து யானைகள் உணவு தேடிச் சென்றன. அப்போது பாதையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த உயரழுத்த மின் வேலி போடப்பட்டுள்ளது. அந்த பாதை வழியாக சென்ற யானைகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சமந்தப்பட்ட தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.
ஒடிசாவில் கடந்த 18 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 170 யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது.