அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கடந்த 30 ஆம் தேதி பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்திற்கு ஐந்து துணை முதலமைச்சர்களை நியமித்து உள்ளார். அவர்கள் நாளை காலை பதவியேற்க உள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமைய உள்ள அமராவதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு துணை முதல்வர் என மொத்தம் ஐந்து சமுதாயத்திற்கு ஐந்து துணை முதலமைச்சர்களை நியமிக்க உள்ளதாக கூறியுள்ளார். அதாவது எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், காப்பிலியர் என 5 சமூகங்களில் இருந்து தலா ஒருவர் வீதம் 5 முதலமைச்சர்கள் நியமிக்கப்படும்.
இதன்மூலம் மக்களுக்கு தேவையான அனைத்தும் எந்தவித பாகுபாடுன்றி விரைவில் செயல்படுத்த முடியும். மக்களை பிரச்சனைகளை கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. கடந்த அரசுகளை விட நமது அரசு வேறுபட்டது என்பதை மக்களுக்கு காட்ட வேண்டும் எனவும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஐந்து துணை முதலமைச்சர்கள் மற்றும் 24 அமைச்சர்கள் அன்`அனைவரும் நாளை காலை பதவியேற்க உள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்திற்கு 5 துணை முதலமைச்சர்கள் நியமிப்பது என்பது இதுவே முதல்முறை ஆகும். இதற்கு முன்பு இரண்டு துணை முதலமைச்சர்களை சந்திரபாபு நாயுடு நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.