புதுடெல்லி: சனி (செப்டம்பர் 9) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "பாரதத்தின் குடியரசுத்தலைவர்" என்று தன்னை அழைத்துக்கொண்டு உச்சிமாநாட்டின் ஓரத்தில் இரவு விருந்துக்கான அழைப்பிதழ்களை அனுப்பியபோது இந்த சர்ச்சை துவங்கியது. இது நாட்டின் பெயரை அரசாங்கம் மாற்றப் போகிறது என்ற ஊகத்தை கிளப்பியது.
இந்த சாத்தியமான பெயர் மாற்றம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜி20 மாநாட்டில், இந்திய பிரதமர் மோடியின் மேஜையில் 'பாரத்' என்ற பெயர் பலகை இருப்பது அந்த ஊகங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இன்று புதுதில்லியில் ஜி20 உறுப்பு நாடுகளில் பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கியபோது, அவர் அமர்ந்திருந்த மேசையில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை இருந்தது.
மேலும் படிக்க | ’பாரத்’ பிரதமர் மோடி சுற்றுப் பயண அறிவிப்பிலும் இந்தியா நீக்கம்
புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை
இந்திய அரசியலமைப்பு அமைப்புகளால் வழங்கப்படும் அழைப்பிதழ்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரை இருக்கும்போது இந்தியா என்ற பெயரையும், உரை இந்தியில் இருக்கும்போது பாரத் என்றும் குறிப்பிடுவது வழக்கமானது. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் போது, இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து அந்த அமர்வின் போது விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம்.
சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி, “பாரத் வெர்சஸ் இந்தியா” சர்ச்சை குறித்து கருத்து கூறுவதை தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். இதற்கிடையில் அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளில் இருந்து குடிமக்களின் கவனத்தை திசை திருப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மேலும் படிக்க | சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த திருத்த மசோதாவுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் என்ன ஆகும்?
- அனைத்து பாஸ்போர்ட்கள், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு அட்டைகளை திரும்பப் பெற்று, பாரத் என்று பொறிக்கப்பட்ட அட்டைகளை அளிக்க வேண்டும். தற்போது ஒரு கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் reserve bank of India என்று பொறிக்கப்பட்டிருப்பதை மாற்ற வேண்டும். எனவே அனைத்து நோட்டுகளையும் திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை அளிக்க வேண்டும்.
- உலகெங்கும் உள்ள இந்திய தூதரங்களின் பெயர்கள், ஆவணங்கள், படிவங்களை உடனடியாக மாற்ற வேண்டியிருக்கும்.
- அனைத்து அரசு அலுவலங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், படிவங்கள், முத்திரைகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும்.
- IOC, IIT, IIM, AIIMS, ISRO, Air India போன்ற நிறுவனங்களின் பெயர்களை திருத்தி அமைக்க வேண்டும். அப்படி செய்தால், அவற்றின் அடையாளங்கள் மாறி, உலக அளவில் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பு அழிந்து விடும்.
மேலும் படிக்க | இனிமேல் ஜி கூட்டம் நடைபெறாது! ஆப்பிரிக்க யூனியன் சேர்தால் G21 என பேர் மாறிடும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ