தேசியவாத காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சர் 100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டதாக, முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர், கூறியது, மகாராஷ்டிரா அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Maharashtra Home Minister Anil Deshmukh submits resignation to Chief Minister Uddhav Thackeray: NCP sources
(file photo) https://t.co/eCgxRuepwN pic.twitter.com/SsfsFpXNbC
— ANI (@ANI) April 5, 2021
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் 15 நாட்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்க வேண்டும் என மத்திய புலனாய்வு துறைக்கு ( CBI) மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் கூறிய குற்றச்சாட்டு மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை காவல்துறை ஆணையர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் அனில் தேஷ்முக், ஹோட்டல்கள் விடுதிகள் ஆகியவற்றிடமிருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என உத்தர்விட்டிருந்தாதாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் தேஷ்முக் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா; மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR