ஜன் அதிகார் கட்சியின் தலைவர் பப்பு யாதவ் (மாதேபுரா எம்.பி)பாட்னா போலீசாரால் நேற்று(திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் பாட்னாவின் காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்ட வழக்கில் பப்பு யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்றும் பிஹார் சட்டப்பேரவை முன்பு போராட்டத்தில் குதித்த யாதவ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து பப்பு யாதவ் அவரின் ஆதரவாளர்களின் உதவியோடு வன்முறையைத் தூண்டுவதாக பாட்னா காவல்துறை தெரிவித்தது.
பின்னர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு காந்தி மைதான காவல்துறை, பப்பு யாதவின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தது. அப்போது யாதவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை விடுவிக்கக் கோரி கோஷமிட்டனர். ஆனால் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு நள்ளிரவில் பாட்னா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.