லக்னோவில் (Lucknow) உள்ள பிரபலமான Coffee House, கொரோனா காலத்திற்கு ஏற்றாற்போல் தனது மெனுவை மாற்றியுள்ளது. பிரசித்திபெற்ற இந்த Coffee House-க்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், நாடக எழுத்தாளர்கள் மற்றும் உத்தரபிரதேச தலைநகரின் பல முக்கியஸ்தர்கள் வருவது வழக்கம்.
ஃபில்டர் காஃபியைத் (Filter Coffee) தவிர - அதன் மெனுவில் இந்த நவீன காலத்தில் கூட காப்புசினோ, டால்கோன் மற்றும் ஃப்ராப்பே போன்ற காஃபி வகைகள் இடம்பெற்றதில்லை. எனினும், இந்த கொரோனா காலத்தில் லக்னோவின் இந்த Coffee House ஒரு விஷயத்தை தன் மெனுவில் கூட்டியுள்ளது. தன் பானங்கள் பட்டியலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘கடா’ அதாவது கஷாயத்தை Coffee House சேர்த்துள்ளது.
"எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மனதில் வைத்து நாங்கள் இதைச் செய்துள்ளோம்" என்று Indian Coffee House-ன் செயலாளர் அருணா சிங் கூறினார்.
கஷாயத்தில், இலவங்கப்பட்டை, கிலோய் இலைகள், கிராம்பு, ஏலக்காய், முலேதி (மதுபான வேர்), துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு உள்ளிட்ட மருத்துவ மூலிகைகள் உள்ளன என்று அவர் கூறினார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் ஒரு பெரிய கப் 25 ரூபாய், மற்றும் ஒரு சிறிய கப் 15 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Health News: உடல் எடை குறைய Black Coffee-யா, Green Tea-யா? எது சிறந்தது?
ஜூன் மாதத்தில் நாங்கள் மீண்டும் காஃபி ஹவுஸைத் திறந்ததிலிருந்து, எங்கள் வாடிக்கையாளர்கள் முக்கியமாக மீண்டும் அலுவலகத்திற்கு செல்லத் தொடங்கியவர்கள் இங்கு ஓய்வுக்காக வரத் தொடங்கினார்கள். அவர்கள் காஃபி (Coffee) மற்றும் பிற பொருட்களை விரும்புகிறார்கள் என்றாலும், எந்தவொரு இந்திய வீட்டிலும் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தி பானமாக இருக்கும் கஷாயத்தையும் எங்கள் மெனுவில் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஏனெனில் இது காலத்தின் தேவையாகிவிட்டது” என்று அவர் கூறினார்.
காஃபி ஹவுஸின் மெனுவில் ஏற்பட்ட மாற்றத்தை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
"பல ஆண்டுகளாக, Coffee House –ல் எந்த மாற்றங்களையும் செய்யாமல் இருந்தோம். உள்கட்டமைப்பு, ஃபர்னிச்சர், மெனு என எதிலும் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தோம். ஆனால் இப்போது இந்த மாற்றத்தை செய்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வரவிருக்கும் நாட்களில் நாங்கள் இன்னும் சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்”என்று இளம் நிர்வாகி அஸ்வின் லால் கூறினார்.
ALSO READ: Sugar Alternatives: சர்க்கரைக்கு 5 ஆரோக்கியமான மாற்று வழிகள் உங்களுக்காக...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR