குடியரசு தின அணி வகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
குடியரசு தினம் வருகிற 26-ஆம் தேதி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். மேலும் இந்த விழாவில் இந்தியாவின் கலாச்சார சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் அணி வகுப்பு நடைபெறும்.
குடியரசு தின விழாவில் ஜனாதிபதி கொடியேற்றி முடித்த பிறகு டெல்லி ராஜ பாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
இந்த ஆண்டு மொத்தம் 56 அலங்கார ஊர்திகள் பரிந்துரையில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிகொடுப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்தது. இதற்காக அதிகாரிகள் 5 தடவை கூடி விவாதித்தனர். அப்போது 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பில் பங்கேற்கவும் 6 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காளத்தின் அலங்கார ஊர்தியை புறக்கணித்து இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.