ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள மலைப்பாங்கான டோடா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், மலைப்பகுதியில் இருந்த வீடு அடியோடு சரிந்து அருகில் இருந்த குளத்தில் வீழ்ந்து மூழ்கியதால். இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
நொர் முகம்மது குஜ்ஜரின் 'தாகோ' பகுதிக்கு உட்பட்ட காந்தே கிராமத்தில் இருந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு உடனடி தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவயிடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்,. மீட்பு குழுவினருடன் இணைந்து அக்கிராமவாசிகளும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். எனினும் பள்ளத்தாக்கில் சிக்கயவர்களை மீட்க இயலவில்லை. இவர்கள் 5 பேரது சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தில் பலியானர்களின் பெயர்கள் பஷீர் அஹ்மத் (25), அவரது மனைவி நாகீனா (23), சுல்பி பானு (9), முகம்மது ஷெரீப் (8) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக ஜம்முவில் பொழிந்து வரும் கனமழையால் ஜோதா பகுதியின் இதர பகுதிகள் உட்பட டோடா மாவட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!