News Titbits: இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பெறவுள்ள முக்கியச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கக்கூடிய செய்திகள் இவை. அனுமானங்கள் உண்மையாகுமா? 

Last Updated : Feb 9, 2022, 10:09 AM IST
  • வேகமெடுக்கும் ஹிஜாப் விவகாரம்
  • காட்டுக்குள் சிக்கிய இளைஞர்
  • ஆவணப் படுகொலை
News Titbits: இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பெறவுள்ள முக்கியச் செய்திகள் title=

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் 2022இல் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்களின் பதவி 2022 மார்ச் 15 - மார்ச் 27களில் முடிவடைகிறது.

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, எதிர் கட்சிகளின் பிரசாரம் மும்முரமாக இருக்கும் நிலையில், பாஜகவின் பொய்யான வாக்குறுதியில் மயங்கி விடாதீர்கள் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

ஆணவக்கொலை கொடுமை உலகம் முழுவதும் தொடரும் கொடுமை. இரானில் மோனா ஹெய்டாரி என்ற 17 வயது பெண்ணை அவரது கணவரும், கணவரின் சகோதரரும் வெட்டிக் கொன்றனர்.

துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் தெருவில் சுற்றித் திரிந்த கணவரின் வீடியோ வைரலானதைஅடுத்து ஈரானில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ALSO READ | மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கணவன்!

நண்பர்களுடன் மலையேற சென்றபோது பாறை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்கும் பணி தீவிரம்.

கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற 28 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார்.

இதுதொடர்பாக மலம்புழை வனத்துறையினரிடம் (Forest Happenings), பாபுவின் நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். பாபு சிக்கியுள்ள இடத்தை அடையாளம் காணமுடியாத நிலையில், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. 

குரும்பாச்சி மலையில் சிக்கிய இளைஞர், பல மணி நேரங்களாக சிக்கி இருக்கும் காட்சிகள் வைரலாகின்றன. இளைஞரை மீட்க முயற்சிகள் தொடர்கின்றன.

ஹிஜாப் சர்ச்சை

கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள பல ஜூனியர் கல்லூரிகளில் ஹிஜாப் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு எதிரான மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில், பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டங்கள் வெடித்துள்ளன

கர்நாடகாவில் ஹிஜாப் தடை குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூடப்பட்டது

தேசிய ஒற்றைச் சாளர அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய வட்டி விகிதங்கள் குறித்து முடிவு செய்வதற்காக ரிசர்வ் வங்கி மூன்று நாள் நிதிக் கொள்கை கூட்டத்தைத் தொடங்கியது.

ALSO READ | மும்பை அணி இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்த 5 வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News