INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?

INDIA Alliance News: INDIA கூட்டணியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையால், காங்கிரஸ் கட்சி பலத்த இழப்பை சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண அக்கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 31, 2024, 06:03 PM IST
  • காங்கிரஸ் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகல்
  • அவரது குடும்பம் சுமார் 55 வருடங்களாக காங்கிரஸில் உள்ளது.
  • அவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன? title=

INDIA Alliance News: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கான நிகழ்ச்சிகளை கிழக்கு பிரதேசமான மணிப்பூரில் இருந்து இன்று தொடங்கினார். அதே வேளையில், மேற்கு பிரதேசமான மகாராஷ்டிராவில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை இன்று சந்தித்திருக்கிறது எனலாம். 

மிலிந்த் தியோரா விலகல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். சுமார் 55 ஆண்டுகளாக மிலிந்த் தியோராவின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறது, இத்தனை ஆண்டுகால உறவை அவர் தற்போது முறித்துள்ளார். ராகுல் காந்தியின் யாத்திரைக்கு முன்னதாக பாஜக சதித்திட்டம் தீட்டியதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கட்சிக்குள் உருவாகி வரும் புயலை அக்கட்சியினர் புறந்தள்ளுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மும்பை தெற்கு நாடாளுமன்ற தொகுதியை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து, மிலிந்த் தியோரா ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தொகுதியில் போட்டியிடுவதில் மிலிந்த் தியோரா பிடிவாதமாக இருந்தார் என்றும் அது INDIA கூட்டணியில் உள்ள சிவசேனாவுக்கு கொடுத்ததால் இவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Ram Mandir: சடங்குகளை கடைபிடித்தே ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது! பிரதமரின் விரதம்

நிரப்ப முடியாத வெற்றிடம்

INDIA கூட்டணியில் சீட்-பகிர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட முதல் பிரச்னை மிலிந்த் தியோரா எனலாம். இந்த ஆண்டு வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தல்களுக்கு, காங்கிரஸ் ஒரு நுட்பமான சமநிலையுடன் செல்ல திட்டமிடுகிறது. அதாவது ராஜஸ்தானில் சச்சின் பைலட்டின் கிளர்ச்சியில், சில சங்கடமான சம்பவங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டது. இது அவர்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை பெற்று தந்தது. 

மும்பை தெற்கு தொகுதியில் தற்போது சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் உள்ளார். பாஜக உடன் கூட்டணியில் இருந்தபோது உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இந்த இடத்தை வென்றதால், ஷிண்டே தலைமையிலான சிவசேனா அந்த தொகுதியில் மிலிந்த் தியோராவை நிறுத்தும் எனலாம். எனவே, இதில் பெரும் வாக்குகள் சிதறலாம். காங்கிரஸைப் பொறுத்தவரை, மிலிந்த் தியோராவின் விலகல் அக்கட்சிக்கு பெரிய இழப்பாகும். குறிப்பாக பிராந்தியத்தில் கட்சியின் வியூகத்தை தீர்மானத்திலேயே பிரச்னை வரும். இந்த வெளியேற்றம் வரவிருக்கும் தேர்தல்களை கடும் வெற்றிடத்தை உருவாக்கும், அதை யாராலும் நிரப்பவும் இயலாது.

மேலும் படிக்க | Consecration ceremony: அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கில் சனாதன விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

விலகும் ராகுல் காந்தி தோஸ்துகள்

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், இப்பகுதியில் கணிசமான வாக்குகளைப் பெறும் திறமையான தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளதை குறிப்பிட்டாக வேண்டும். 2019 மக்களவை தேர்தலில் சாவந்த் சுமார் 4.21 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், தியோரா 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிலிந்த் தியோராவின் வெளியேற்றம் மகாராஷ்டிர சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனலாம்.

ஒரு காலத்தில் ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. மிலிந்த் தியோராவின் வெளியேற்றம் காங்கிரஸுக்குள் அதிகரித்து வரும் வெற்றிடத்தையும் குறிக்கிறது எனலாம். ஜோதிராதித்ய சிந்தியா, குலாம் நபி ஆசாத், கபில் சிபில், ஹர்திக் படேல், அஸ்வனி குமார், சுனில் ஜாகர், ஆர்பிஎன் சிங், அமரீந்தர் சிங், ஜிதின் பிரசாத் மற்றும் அனில் ஆண்டனி உள்ளிட்டோர் முன்பு ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருந்து, பின்னர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள்.

காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?

பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதி பகிர்வு ஒப்பந்தத்தில் பின் சமரச மனநிலையில் காங்கிரஸ் இருப்பதால், அதிக இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நிச்சயமாக அதன் பல தலைவர்களின் லட்சியத்தையும் பாதிக்கலாம். அதிருப்தியை காங்கிரஸ் கட்சி கட்டுப்படுத்தத் தவறினால், மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே மேலும் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி, கட்சியை மேலும் பலவீனப்படுத்தலாம்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவைத் தவிர்க்கும் முடிவை காங்கிரஸ் அறிவித்த பின்னர், ஏற்கனவே எதிர்ப்புக் குரல்களை கண்டுள்ளது. அதாவது, ராமர் கோவில் நிகழ்வில் கலந்து கொள்வதில் இருந்து காங்கிரஸ் விலகும் என்ற முடிவால் வடக்கு மண்டல காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகள் மிக முக்கியமானவை ஆகும். காங்கிரஸ் கட்சி இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் கிட்டத்தட்ட சேதராம் அடைந்த காங்கிரஸ் பெரும் பின்னடைவை நோக்கி செல்லும் எனலாம். 

மேலும் படிக்க | ரூ.35 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய ஐபிஎஸ் அதிகாரி... 12th Fail போன்ற சாதனை கதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News