ரஷ்ய ராணுவத் தளவாட விவகாரம் 2+2 பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமில்லை

ரஷ்ய ராணுவத் தளவாட விவகாரம் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமில்லை என மைக் பாம்பியோ தெரிவித்தள்ளார்.....! 

Last Updated : Sep 5, 2018, 10:25 AM IST
ரஷ்ய ராணுவத் தளவாட விவகாரம் 2+2 பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமில்லை title=

ரஷ்ய ராணுவத் தளவாட விவகாரம் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமில்லை என மைக் பாம்பியோ தெரிவித்தள்ளார்.....! 

ரஷ்யாவிடம் இந்தியா ராணுவத் தளவாடங்கள் வாங்கும் விவகாரம் 2+2 பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமாக இருக்காது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜிம் மாட்டிஸ் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த 2+2 பேச்சுவார்த்தையில் இரு தரப்பு ராணுவ உறவை மேம்படுத்துவது குறித்து ஜிம் மாட்டிசுடன், நிர்மலா சீதாராமன் பேச்சு நடத்த உள்ளார். அப்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவுடன் பேச்சு நடத்தும், சுஷ்மா சுவராஜ், அமெரிக்க எதிர்ப்பை மீறி, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அயர்லாந்து செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ராணுவத் தளவாடங்கள் வாங்குவதோ, ஈரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோ 2+2 பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

 

Trending News