புது டெல்லி: நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடங்கியது. அப்பொழுது, இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குதிரைப்படைச் சூழ குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி வந்தார். நாடாளுமன்றத்தில் முக்கிய தலைவர்கள் அவரை வரவேற்றனர்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தனது முதல் உரையை நிகழ்த்தி வருகிறார்.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்! தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!
இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வை மாறிவிட்டது: குடியரசுத் தலைவா் முர்மு
ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகால மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு காரணமாக இந்திய மக்கள் முதன்முறையாக பல சாதகமான மாற்றங்களைக் கண்டுள்ளனர். இன்றைக்கு ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கையும் உச்சத்தில் இருப்பதும், இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வை மாறுவதும் என மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார்.
வளமான சகாப்தத்தை உருவாக்கும் வாய்ப்பு: குடியரசுத் தலைவா் முர்மு
ஒரு சகாப்தத்தை உருவாக்க நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. வறுமை இல்லாத, வளமான நடுத்தர வர்க்கத்தையும் கொண்ட தன்னிறைவு கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். இளைஞர் சக்தியும், பெண் சக்தியும் சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் வழிகாட்டியாக நிற்கிறது.
மேலும் படிக்க: Budget 2023: சாமானியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த பட்ஜெட்டில் பல மாஸ் அறிவிப்புகள்
மத்திய அரசு தீர்க்கமான முடிவு: குடியரசுத் தலைவா் முர்மு
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல விஷயங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்து இருக்கிறது: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை
சாமானியர்களின் கனவுகள் நனவாகும்: பிரதமர் மோடி
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, இந்த பட்ஜெட் சாமானியர்களின் கனவுகளை நனவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த பட்ஜெட் சாமானியர்களின் கனவுகளை நிறைவேற்றும் என்று கூறினார். உலகமே இந்தியாவை ஒரு நம்பிக்கை இடமாகப் பார்க்கிறது என்றும், அதை அந்த திசையில் கொண்டு செல்லும் வகையில் இந்த முறை பட்ஜெட் இருக்கும் என்றும் அவர் கூறினார். முதன்முறையாக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தொடரில் அதிபர் முர்மு உரையாற்றுவது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்எனவும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் படிக்க: Budget 2023: பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்தப்படும்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ