முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Forgiveness is a virtue of the brave.
Indira Gandhi pic.twitter.com/1soJmsU93E
— Rahul Gandhi (@RahulGandhi) November 19, 2018
இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர், முதல் பெண் பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகள். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக தனது பெயரை மாற்றிக்கொண்டா். பின்னர் தனது பெயரை சுருக்கமாக இந்திரா காந்தி மாற்றிக்கொண்டார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24, 1977 வரை பதவியில் இருந்தார்.
Former PM Dr. Manmohan Singh, UPA Chairperson Smt. Sonia Gandhi & Congress President @RahulGandhi pay their respects to Smt. Indira Gandhi at Shakti Sthal on her birth anniversary. pic.twitter.com/M2MwdV27b9
— Congress (@INCIndia) November 19, 2018
இதை முன்னிட்டு அவரது நினைவிடம் அமைந்துள்ள டெல்லியின் சக்தி ஸ்தலத்திற்கு (Shakti Sthal) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் சென்றார். இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதன் மீது மலர் தூவி சோனியாவும், ராகுலும் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மரியாதை செலுத்தினார்.