ITR 2021 22 சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரித்துறையின் பெரிய அறிவிப்பு

புதிய நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான முக்கியத் தகவல்கள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 4, 2022, 07:35 PM IST
  • புதிய நிதியாண்டில் வருமான வரி தாக்கல்
  • முக்கியமான மாற்றங்கள்
  • 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள தனிநபர்கள் ITR-1 படிவம் நிரப்ப வேண்டும்
ITR 2021 22 சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரித்துறையின் பெரிய அறிவிப்பு title=

புதுடெல்லி: மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-5 வரையிலான படிவங்களை அறிவித்துள்ளது. கார்ப்பரேட்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான ITR படிவங்கள் (ITR 6 மற்றும் 7) பின்னர் அறிவிக்கப்படும்.

ITR-1 படிவம், 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள தனிநபர்களால் நிரப்பப்பட வேண்டும். ITR-2 படிவம் வணிகம் மற்றும் தொழிலில் வருமானம் இல்லாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் (HUF) மூலம் தாக்கல் செய்யப்படுகிறது.  

ITR-3 படிவம், வணிகம்/தொழில் மூலம் வருமானம் உள்ளவர்களால் தாக்கல் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் ITR-5 LLPகளால் தாக்கல் செய்யப்படுகிறது. ITR-4ஐ தனிநபர்கள், HUFகள் மற்றும் மொத்த வருமானம் ரூ.50 லட்சம் மற்றும் வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் உள்ள நிறுவனங்கள் தாக்கல் செய்யலாம்.

itr

2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரி படிவங்கள் தொடர்பாக சம்பளம் பெறும் வகுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டிய  5 முக்கிய விஷயங்கள்...

1. ITR-1 படிவம் கடந்த ஆண்டைப் போலவே இருந்தாலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

2. வருமான வரி தாக்கல் (ITR Filing) செய்யும்போது, நிகர சம்பளத்தை கணக்கிடும் போது வெளிநாட்டு ஓய்வூதிய நிதியிலிருந்து வருமானம் பற்றிய தகவலை வழங்க வேண்டும். வெளிநாட்டு ஓய்வூதிய நிதி அறிவிக்கப்பட்ட நாட்டில் உள்ளதா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

3. ITR-2 படிவம், வருங்கால வைப்பு நிதியில் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கும் அதிகமான பங்களிப்பின் மீதான வட்டியைப் பற்றிய தகவல்களைக் கோருகிறது. 

மேலும் படிக்க | NPS, EPF, ITR மற்றும் க்ரிப்டோ வரி விதிப்பில் பெரிய மாற்றங்கள் 

4. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (EPF) குறிப்பிட்டத் தொகைக்கு அதிகமாக டெபாசிட் செய்பவர்களுக்கு வரி விதிக்கப்படும். வருங்கால வைப்பு நிதியில் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் பணியாளர்கள் செலுத்தும் தொகைக்குக் ஏப்ரல் 1, 2021 முதல் வரி விதிக்கப்படும்.

5. தற்போதைய ஐடிஆர் படிவங்களில் கிரிப்டோகரன்சிகளுக்கான வரிவிதிப்பு பற்றி குறிப்பிடாததால், 2021-22 நிதியாண்டில் கிரிப்டோக்களின் வருமானம் எவ்வாறு தெரிவிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

 

மேலும் படிக்க | அதிகரிக்கும் தொற்றின் எதிரொலி: தனியார் நிறுவன ஊழியர்கள் WFH செய்ய அரசு உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News