இந்திய விமானபடைக்கு சொந்தமான மிஜி-21 விமானம் திடீர் என விபத்துக்குள்ளானது!
இந்திய விமானபடைக்கு சொந்தமான மிஜி-21 ரக விமானம் இன்று (புதன்கிழமை) ஹிமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் ஜவாலி துணைப்பிரிவில் வெடித்து சிதறியது.
இதை தொடர்ந்து ANI-தகவலின் படி, விபத்துக்குலான விமானத்தில் இருந்த பைலட்-டை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து, விமானம் கடந்து சென்ற வனப்பகுதியில் விமானத்தின் எரிந்து சிதறிய பகுதிகள் கிடைத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணத்தை இதுவரை கண்டறியப்படவில்லை.
MiG-21 Indian aircraft coming from Punjab's Pathankot crashes in Patta Jattiyan in Jawali subdivision of Himachal Pradesh's Kangra district. Pilot is missing. Rescue team on the way. More details awaited pic.twitter.com/093Psw4HEj
— ANI (@ANI) July 18, 2018
இது போன்று இந்திய விமானப்படையின் விமானங்கள் தொடர்ந்து விபத்து அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து, பைலட்-டை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.