News Tidbits செப்டம்பர் 19: இன்றைய சில முக்கியமான செய்திகள்...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.81 லட்சத்தை கடந்தது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2020, 09:53 PM IST
News Tidbits செப்டம்பர் 19: இன்றைய சில முக்கியமான செய்திகள்... title=
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4.81 லட்சத்தை கடந்தது.
  • பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தகவல் தெரிவித்துள்ளார்.
  • 30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் மேற்கொள்கிறது ஐ.என்.எஸ் விராட் கப்பல்
  • வேளாண் மசோதா தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • தொடர்ந்து இரண்டாவது நாளாக, பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியது. பாகிஸ்தானின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த மாதத்தில் மட்டும் அந்நாட்டு ராணுவம் 31 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. 
  • ஒருபுறம் தோஹாவில் ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், அந்நாட்டில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் வன்முறை அதிகரித்துள்ளது.
  • அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரியான Keith Crutch தைவானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், சீனாவின் 18 போர் விமானங்கள் பறந்து அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளன.  அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரியான Keith Crutch இன் பயணத்தால்  சீனா எரிச்சலடைந்துள்ளது.  

Also Read | இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் அதிசயம்! காரணம் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News