பட்ஜெட் அமர்வின் முதல் பாதி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கலாம். அமைச்சின் பல்வேறு பிரிவுகளுக்கு இதுதொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்கக்கூடிய சர்ச்சைகள் மற்றும் கேள்விகளை எதிர்கொள்ள தேவைப்படும் தகவல்களை சேகரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய விமான சேவையான 'ஏர் இந்தியா' மற்றும் விமான நிலைய ஏஜென்சி 'இந்திய விமான நிலைய ஆணையம்' (AAI) ஆகியவற்றை நிர்வகிக்கும் அமைச்சகம் தனியார்மயமாக்கலைச் சுற்றியுள்ள பக்கங்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21-ஆம் ஆண்டுக்கான மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் பொது பட்ஜெட்டை 2020 பிப்ரவரி 1-ஆம் தேதி முன்வைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அமர்வு ஏப்ரல் வரை தொடரலாம் எனவும் கூறப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர், புது வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்கவும், அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும், கடந்த செப்டம்பரில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் பட்ஜெட்டில் நடுத்தர வரக்கத்தினர், 10% அளவுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக வீடு வாங்குபவர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில், பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காலம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் அமர்வு ஆனது 2020 ஜனவரி 31 முதல் தொடங்கும் எனவும், ஏப்ரல் மாதம் வரை இயங்கும் எனவும் தெரிகிறது. மேலும் இந்த பட்ஜெட் அமர்வு ஆனது இரண்டு பகுதிகளாக இருக்கும் எனவும், முதல் அமர்வு ஜனவரி 31 முதல் தொடங்கி பிப்ரவரி 7 வரையிலும், இரண்டாவது அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.