சீன ட்ரோன்களை பயன்படுத்தி காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாக். சதி ..!!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சீன ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பாகிஸ்தானின் திட்டம் அம்பலமாகியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2020, 02:29 PM IST
  • காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சீன ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பாகிஸ்தானின் திட்டம் அம்பலமாகியுள்ளது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்க ட்ரோன்கள் மற்றும் பிற வழிகளை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
  • ஆனால் இந்திய இராணுவத்தின் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளால், இவை சாத்தியம் இல்லாமல் போகின்றன.
சீன ட்ரோன்களை பயன்படுத்தி காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த பாக். சதி ..!!!!  title=

சீன ட்ரோன்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான பாகிஸ்தானின் திட்டத்தை இந்திய புலனாய்வு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் (Jammu and Kashmir) மற்றும் பஞ்சாபில் உள்ள பயங்கரவாதிகளுக்கு சீன ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை வழங்குவதற்கான பாகிஸ்தானின் திட்டத்தை இந்திய புலனாய்வு அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினரை தாக்க பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ இந்த சீன ட்ரோன்களைப் பயன்படுத்த சதி செய்து வருவதாக ஜீ மீடியாவிடம் வட்டாரங்கள் தெரிவித்தன.

சில மாதங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம் (Indian Army) தொடங்கிய "ஆபரேஷன் ஆல் அவுட்" சம்பவத்தில்  200 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல் முஜாஹிதன் கமாண்டர்கள் ரியாஸ் நாய்கூ மற்றும் டாக்டர் சைபுல்லா ஆகியோரை சமீபத்தில், பாதுகாப்பு படையினர் கொலை செய்தது ஐ.எஸ்.ஐ.யை (ISI) அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் பெரும்பான்மையான பயங்கரவாத குழுக்கள் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளது

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்க ட்ரோன்கள் மற்றும் பிற வழிகளை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஆனால் இந்திய இராணுவத்தின் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கைகளால், இவை சாத்தியம் இல்லாமல் போகின்றன

எல்லை கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகில் ஏராளமான பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்துவதாகவும், சில பயங்கரவாதிகள் பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்களிலும் உள்ளனர் என்றும் புலனாய்வு அமைப்புகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

ALSO READ | 3 Summit-களில் இந்த மாதம் Narendra Modi மற்றும் Xi Jinping நேருக்கு நேர் சந்திப்பார்கள்!!

இந்திய பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க  இந்த ட்ரோன்களை பயன்படுத்துகிறது. இந்த ட்ரோன்களில் நிறுவப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களை பாகிஸ்தான்  படைகள் பயன்படுத்துகின்றன. 

பாகிஸ்தானில் (Pakistan) இருந்து வரும் இந்த ட்ரோன்களின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்திய ராணுவம் இப்போது ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லையில் ட்ரோன்களின் ஆபத்தை சமாளிக்க அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது

பஞ்சாபில் உள்ள காலிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை வழங்கவும் பாகிஸ்தான் ட்ரோன்களையும் பயன்படுத்துகிறது. இந்த சீன ட்ரோன்கள், இர்ஃஅணுட் கிலோ மீட்டர் தூரத்திற்கு  4-5 கிலோ வரை எடையுள்ள பொருட்களைக் கொண்டு செல்லக்கூடியவை. இந்த ட்ரோன்கள் ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை. இந்த ட்ரோன்களில் வைக்கப்பட்டுள்ள குண்டுகளின் உதவியுடன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு படையினரையும் பாகிஸ்தான் தாக்க முடியும் என்று பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ALSO READ | பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய வெற்றியாக ஹிஸ்புல் கமாண்டர் கொலை..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News