ரயில்வே பட்ஜெட் 2023: 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய மோடி அரசின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறை அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. அதேபோல் இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், இந்த முறை பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில், ரயில்வே வாரியம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25-30 சதவீதம் கூடுதல் நிதியை நிதி அமைச்சகத்திடம் கோரியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இம்முறை அரசாங்கம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் என்ன எதிர்பார்ப்புகள் உள்ளது?
2022-23 யூனியன் பட்ஜெட்டில், ரயில்வேக்கு ரூ.1.4 டிரில்லியன் நிதி அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாக வரை அதிகரிக்கலாம். ரயில்வே இந்த நிதியை புதிய பாதைகள் அமைத்தல், கேஜ் மாற்றம், மின்மயமாக்கல் மற்றும் சிறந்த சிக்னலிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்தும். இது தவிர, ரயில்கள் தயாரிப்பதற்கான சிறந்த உள்நாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ரயில்வே கவனம் செலுத்துகிறது. இதில், ரயில்களின் சக்கரங்களில் வெளிநாட்டுச் சார்பைக் குறைக்கும் திட்டமும் வகுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Budget 2023: நிதி அமைச்சகம் அளித்த நல்ல செய்தி, இனி இதற்கு GST கிடையாது
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்த அறிவிப்பை வெளியிடலாம்
மறுபுறம் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் 2.0 ரயில்களையும் உருவாக்க பட்ஜெட்டில் வலியுறுத்தப்படலாம். மேலும் இனி வரும் காலங்களில் இந்த ரயிலிகளில் ஸ்லீப்பர் பர்த் நிறுவப்படும். இதன் மூலம், பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது தூங்கும் வசதி கிடைக்கும். இந்த ரயில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போல் செயல்படும், இதில் பயணிகளுக்கு ஸ்லீப்பர் ஏசி கோச் வசதியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி, இந்த முறை 100க்கும் மேற்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பது குறித்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம். ஸ்லீப் கோச்சுடன் கூடிய புதிய வந்தே பாரதத்தையும் அறிவிக்கலாம். இது தவிர, இந்த பட்ஜெட்டில் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு கவசம் குறித்தும் அரசு கவனம் செலுத்தலாம். இதனுடன் ரயில் பாதுகாப்புக்காக வழித்தடத்தை விரிவாக்கம் செய்யலாம்.
ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டின் ஒரு பகுதியாகும்
தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசு, 92 ஆண்டு கால வழக்கத்தை மாற்றியது. கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அப்போது, ரயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டையும் இணைப்பதன் மூலம் ரயில்வே துறை வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டது.
அந்த அடிப்படையில் 2017-18 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் பொது பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் 92 ஆண்டு கால வழக்கம் முடிவிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ