டெல்லி ஜே.என்.யூ வளாகத்தில் மரமநபர்கள் கும்பல் புகுந்து மாணவர்களையும், பேராசியர்களையும் கடுமையாக தாக்கியதை கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ள்ளனர். மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ளவர்கள் ஏ.பி.வி.பி.யை சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் வந்த போலீசார் மாணவர்களின் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏ.பி.வி.பி. மாணவர்கள் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஐஸ் கோஷ் உள்பட பலருக்கு மண்டை உடைந்தது.
இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.
அந்தவகையில் பல்கலைக்கழக மோதலையடுத்து, டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, மோதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் திரண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். அதேபோல், புனேவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டில் பயிலும் மாணவர்கள், டெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்து போராட்டம் நடத்தினர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கேட்வே ஆப் இந்தியா முன் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.