காஷ்மீரில் என்கௌண்டர்: 1 பயங்கரவாதி சுட்டுக்கொலை, ஆயுதங்கள் மீட்பு!!

தென் காஷ்மீரின் குல்காமில் உள்ள ஆரா பகுதியில், சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்த பின்னர் பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் பணியை மேற்கொண்டனர்.https://zeenews.india.com/tamil/topics/Security-Forces

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 03:20 PM IST
  • பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
  • ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில், அதிக அளவிலான ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் காவல் துறை கைப்பற்றியுள்ளது.
  • கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
காஷ்மீரில் என்கௌண்டர்: 1 பயங்கரவாதி சுட்டுக்கொலை, ஆயுதங்கள் மீட்பு!! title=

குல்காம்: ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) குல்காமில் (Gulgam) உள்ள ஆரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் (Security Forces) பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில், ஒரு பயங்கரவாதி (Terrorist) கொல்லப்பட்டான். இப்பகுதியில் தற்போது காவல் துறை வீரர்களும் பாதுகாப்புப் படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என ANI செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

தென் காஷ்மீரின் குல்காமில் உள்ள ஆரா பகுதியில், சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்த பின்னர் பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

இப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் பாதுகப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கினர். பதில் தாக்குதலில், ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.

‘குல்காமின் ஆரா பகுதியில் ஒரு என்கௌண்டர் நடந்து வருகிறது. காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி வருகின்றனர்’ என என்கௌண்டரின் துவக்கத்தில் காஷ்மீர் மண்டல காவல் துறை மூலம் ட்வீட் செய்யப்பட்டது.

Also Read: Kanpur Encounter: ரவுடி கும்பலுக்கு தகவல் கொடுத்த காவல் நிலைய அதிகாரி வினய் திவாரி கைது

 மற்றொரு சம்பவத்தில், ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில், அதிக அளவிலான  ஆயுதங்களையும் (Arms and Ammunition) வெடி மருந்துகளையும் காவல் துறை கைப்பற்றியுள்ளது. ANI-யின் படி, UBGL கிரினேடுகள், துப்பாக்கிகள் பிஸ்டல்கள், வெடி மருந்துகள் மற்றும் இன்னும் பல ஆயுதங்களும் உதிரி பாகங்களும் ரஜௌரியிலிருந்து (Rajouri) காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டன.

Also Read: பெங்களூரில் PMO அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்கு பதிவு

Trending News