சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள்

Tibetan refugees in India: இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று G20 மன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2023, 06:35 AM IST
  • தலைநகர் டெல்லியில் திபெத்திய அகதிகள் ஆர்ப்பாட்டம்
  • சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை
  • G20 மன்றத்திற்கு அழைப்பு விடுத்த திபெத்திய அகதிகள்
சீனாவின் ஆக்ரமிப்பை கண்டிக்க வேண்டும்! ஜி20யில் விவாதம் கோரி போராடும் திபெத் அகதிகள் title=

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் வசிக்கும் திபெத்திய அகதிகள் தங்கள் நாட்டில் சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்தியாவின் தேசிய தலைநகரில் உலகத் தலைவர்களின் உச்சிமாநாடு இன்று தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று (2023, செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை) புது தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்திய அகதிகள் போராட்டங்களை நடத்தினர்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி என பல தலைவர்கள் ஜி20 மாநாட்டிற்காக தலைநகர் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் ஆகியோர் முறையே உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் உக்ரைன் நெருக்கடி காரணமாக உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத்தியர்களின் கோரிக்கை என்ன?
சீனா நம்பகமான நாடு அல்ல என்றும், திபெத்தை ஆக்கிரமித்திருக்கும் சீனா தொடர்பாக ஜி20 மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள திபெத்திய சமூகத்தின் உயர்மட்ட தலைவர் கேட்டுக் கொண்டுள்ளதாக  செய்தி நிறுவனமான ANI செய்தி வெளியிட்டுள்ளது. .

"எங்கள் நாட்டை சீனா கைப்பற்றியுள்ளது, அதனால்தான் சீனா நம்பகமான நாடு இல்லை என்ற செய்தியை நாங்கள் வழங்க விரும்புகிறோம்" என்று புதுடெல்லியில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்த திபெத்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர் கோன்போ துண்டுப் கூறியதை மேற்கோளிட்டு, ANI செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!

"ஜி20 மாநாட்டின் போது திபெத் பற்றி விவாதிக்க எங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலக தலைவர்கள் முன் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்," என்று அவர் கூறினார். வியாழன் அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள், புது தில்லியில் G20 உச்சிமாநாட்டின் இடமான பிரகதி மைதானத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் நடத்தப்பட்டன.

திபெத்தின் சீன ஆக்கிரமிப்பு
1950 இல் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது, "அமைதியான விடுதலை"க்காக ஆயிரக்கணக்கான துருப்புக்களை விரைந்தது. அன்றிலிருந்து இப்பகுதியை சீனா ஆட்சி செய்து வருகிறது. திபெத்தில் மத சுதந்திரம் மற்றும் திபெத்திய மொழியில் கல்வி கற்கும் உரிமையை ஒடுக்குவதன் மூலம், திபெத்தில் "கலாச்சார இனப்படுகொலையை" மேற்கொண்டதாக சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், இந்த குற்றச்சாட்டுகளை பெய்ஜிங் வெளிப்படையாக மறுக்கிறது.

போலீஸ் தடுப்பு - மஜ்னு கா தில்லா
இதற்கிடையில், ஜி20 மாநாட்டின் போது திபெத்தியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், மஜ்னு கா தில்லா பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மஜ்னு கா தில்லா ஒரு திபெத்திய குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செப்டம்பர் 2 ஆம் தேதி, நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஜனநாயக அமைப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் 63வது ஜனநாயக தினத்தை தர்மசாலாவில் திபெத்தியர்கள் நினைவுகூர்ந்தனர்.

மேலும் படிக்க | முதல் முறையாக இந்தியா வந்துள்ள ஜோ பிடன்! பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News