New Year Resolutions: 2024 வந்தாச்சு! புத்தாண்டு உறுதிமொழி எடுக்க ரெடியா? இதோ சில ஐடியாக்கள்!

2024 New Year Resolution Ideas: புது வருடம் பிறக்கப்போவதை அடுத்து, இந்த ஆண்டில் என்னென்ன உறுதி மொழிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - Yuvashree | Last Updated : Dec 27, 2023, 02:52 PM IST
  • இன்னும் சில நாட்களில் புது வருடம் பிறக்க உள்ளது.
  • புது வருடத்தில் அனைவரும் உறுதிமொழி எடுப்பது வழக்கம்.
  • இந்த வருடம் உறுதி மொழி எடுப்பதற்கான ஐடியாக்கள்.
New Year Resolutions: 2024 வந்தாச்சு! புத்தாண்டு உறுதிமொழி எடுக்க ரெடியா? இதோ சில ஐடியாக்கள்!  title=

2024 New Year Resolution Ideas Tamil: இந்த 2023ஆம் ஆண்டு பலருக்கு பலவிதமான பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கும். ஒரு சிலருக்கு அது நல்ல பாடங்களாக இருக்கலாம், சிலருக்கு இது எப்போதும் போல கடந்து போன ஒரு வருடமாக இருக்கலாம். புதிய ஆண்டு, புதிய தொடக்கங்களுக்கான ஆரம்பமாக இருக்கலாம். பலர் ஏற்கனவே தனது புது வருடத்தை எப்படி தொடங்க வேண்டும் என்று யோசித்து வைத்திருப்பர். ஒரு சிலர், இன்னும் எப்படி தொடங்கலாம் என யோசித்து கொண்டிருப்பர். 

புத்தாண்டிற்கு உறுதிமொழி எடுத்துக்கொள்வது ஏன்? 

நம் வாழ்வில் அனைத்து தொடக்கங்களுக்கும் ஒரு உறுதிமொழி இருப்பது வழக்கம். பள்ளியில் படிக்கும் போது தினமும் காலையில் உறுதி மொழி எடுப்பதில் இருந்து, திருமணம் ஆகும் போது கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சத்தியம் வரை, காலம் முழுவதும் உறுதி மொழிகள் நம்மை தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. புது வருடத்தின் போது மட்டுமன்றி, உங்கள் வாழ்வில் எந்தவொரு புது விஷயங்கள் தொடங்குவதற்கு முன்பும் சில இலக்குகளை அடைய உறுதி மொழி எடுத்துக்கொள்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. புது வருட உறுதி மொழி, நம்மை நமது இலக்குகளை நோக்கி ஓட வைக்கிறது. சரியான பாதைக்கான வெளிச்சத்தையும் காட்டுகிறது. நீங்கள் நிகழ்காலத்தில் செய்யும் இந்த செயலால் உங்களது எதிர்காலமும் பொற்காலமாக மாறுவதை நீங்கள் கண்கூடாகவே பார்பீர்கள். 

புது வருட உறுதி மொழி ஐடியாக்கள்..

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல்:

பரபரப்பான இந்த சூழலாலும் நீண்ட அலுவலக நேரத்தினாலும் நாம் நமது அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிட தவறி விடுகிறோம். மேலும், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் இருக்க நேரம் கிடைப்பது கடினமாகிறது. அடுத்த வருடத்தில் இருந்து, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட தீர்மானம் எடுங்கள்.

பட்ஜெட்:

அடுத்த ஆண்டு, உங்கள் வரவு செலவுகளை எப்படி கையாள்வது என்று திட்டமிடுவது சிறந்ததாக இருக்கும். இப்படி திட்டமிட்டால் உங்கள் கண்களுக்கு தேவையற்ற செலவுகள் தெரியும். இதனால் நீங்கள் பல வகைகளில் சேமிக்கவும் செய்யலாம். 

மேலும் படிக்க | கணவன்-மனைவிக்குள் இருக்க வேண்டிய வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

விளையாட்டு:

இந்த நவீன உலகில் நம்மில் பலர் வீட்டிற்குள்ளேயே செல்போனில் மூழ்கி விடுகிறோம். அதனால், வரும் வருடத்தில் ஏதேனும் ஒரு வெளிபுற விளையாட்டிலாவது பங்கேற்க வேண்டும் என்று உறுதியெடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடல் நலனுக்கும் நன்மைகள் ஏற்படும். 

புதிதாக சமைத்தல்:

உங்களுக்கு சமையல் பிடிக்கும் என்றால், வாரம் ஒரு முறை ஹெல்தியான ஏதேனும் ஒரு புதிய உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு வழக்கமான சமையலில் இருந்து புது வகை உணவுகளை செய்து சாப்பிட ஆர்வம் ஏற்படும். 

புத்தகங்கள் வாசித்தல்:

வாசிப்புப் பழக்கம் பல்வேறு தலைப்புகளில் உங்கள் அறிவை மேம்படுத்த உதவும். ஆண்டு முழுவதும் உத்வேகத்துடன் இருக்க, நீங்கள் புத்தகக் க்லப்களில் சேரலாம் அல்லது மின் புத்தகங்களை வாங்கலாம். அவை அறிஞர்கள் எழுதிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கதை புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை படித்து உங்கள் கற்பனை திறனை வளர்த்துக்கொள்ளலாம். 

வீட்டை சுத்தம் செய்வது:

அன்றாட வேலை காரணமாக, சில சமயங்களில் நமது வீட்டை ஒழுங்காக வைத்திருக்க நேரம் கிடைப்பதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு முதல், ஒவ்வொரு வாரமும் சில நாட்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கலாம் என உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

கெட்ட பழக்கங்களை விடுதல்:

நம்மை வளர விடாமல், நம்மை ஒரே இடத்தில் வைத்திருக்கும் கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பது நமக்கு தெரியும். அந்த வகையில், உங்களிடம் நீங்கள் மாற்ற நினைக்கும் கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது நல்லது. 

இவற்றை தவிர, சரியான நேரத்திற்கு தூங்கி எழுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்வது என்ற உறுதி மொழிகளையும் நீங்கள் உங்களது மனதில் எழுதிக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | 1 வருடத்திற்குள் உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News