பணத்தேவை என்பது எப்போதும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று, அதனால் சிலர் கூடுதல் வருமானத்தை ஈட்ட விரும்புவார்கள். இந்தியாவிலுள்ள மக்கள் கூடுதல் வருமானம் பெற வெளியில் வேலை தேடி அலையாமல் வீட்டிலிருந்தபடியே சில வேலைகளை செய்யலாம். இப்போது வீட்டிலிருந்தபடியே நீங்கள் வருமானத்தை பெற 6 வேலைகள் இருக்கிறது.
1) யூடியூப் சேனல் :
யூடியூப் இப்போது பிரபலமான ஒன்றாக இருக்கிறது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர். நீங்கள் சிறப்பாக சிலவிஷயங்களை செய்வீர்கள் என்றாலும், உங்கள் செயல்கள் கண்டிப்பாக பார்வையாளர்களை கவரும் என்கிற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் நீங்கள் யூடியூப் சேனல் தொடங்கலாம். வித்தியாசமான வீடியோக்களை பதிவு நீங்கள் தொடங்கிய யூடியூப் சேனலில் அந்த வீடியோக்களை பதிவேற்றலாம். உதாரணமாக திரைப்படங்கள், பாடல்கள், உணவு ரிவியூக்கள்,கேமிங் வீடியோக்கள், குறிப்புகள், சமையல் வீடியோக்கள், நடனம் அல்லது பாடும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவேற்றி ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம்.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
2) ஃப்ரீலான்சிங் :
நீங்கள் ஒரு கன்டென்ட் ரைட்டர், வீடியோ எடிட்டர், டெவலப்பர், கிராஃபிக் டிசைனர் அல்லது பல டெக்னாலஜி தெரிந்தவராக இருந்தால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே பல ஆயிரங்களை வருமானமாக ஈட்ட முடியும். இதனை நீங்கள் ஃப்ரீலான்சிங்காக செய்யலாம், பல தளங்களிலும் இதற்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
3) Airbnb ஹோஸ்டிங் :
உங்கள் வீட்டில் சில வசதிகளுடன் தனியாக ஒரு அறை இருந்தால் அதனை நீங்கள் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்கலாம். உங்கள் நகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் உங்கள் இடத்தில் தங்குவதற்கு நீங்கள் ஹோஸ்ட் செய்யலாம், உங்கள் இடத்தில் தங்கும் பயணிகளுக்கு தரமான உணவுகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை கவரலாம். இதற்காக Airbnb என்கிற தளம் உள்ளது, இதில் நீங்கள் பதிவு செய்துகொள்வதன் மூலம் சுற்றுலா பயணிகள் உங்கள் இடத்தை தேர்வு செய்வார்கள், அதற்கு நீங்கள் பணம் பெறலாம்.
4) கற்பித்தல் :
கற்பிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் உங்களுக்கு சிறப்பான நிபுணத்துவம் இருந்தால் நீங்கள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்குக் கற்பித்து குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்ட முடியும். இதற்கு நீங்கள் யூடியூப் அல்லது வீடியோ கான்பரன்சிங் தளங்களைப் பயன்படுத்தலாம்.
5) அஃபிலியேட் மார்க்கெட்டிங் :
பிளாக்கிங் தற்போது போட்டியான ஒன்றாக மாறிவிட்டது, நீங்கள் ஒரு நல்ல கன்டென்டை உருவாக்குபவராக இருந்தாலும் அல்லது ஒரு பொருளை மக்களுக்கு விற்கக்கூடிய திறமை உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு பெரிய தொகையை சம்பாதிக்கலாம். சில தயாரிப்புகளை விற்கக்கூடிய நபர்களைத் தேடும் பல வணிகங்கள், இணையவழி தளங்கள் மற்றும் சில பிராண்டுகள் உள்ளன அவற்றை தொடர்புகொண்டு நீங்கள் சம்பாதிக்கலாம்.
6) ஆன்லைன் ஆதரவு மற்றும் ஆலோசனை :
இப்போது பெரும்பாலான மக்கள் வேகமான வாழ்க்கை சூழல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர், வேலை, உறவு அல்லது வாழ்க்கை தொடர்பாக எந்தவொரு மன அழுத்தமாகவும் இருக்கலாம். அந்த சமயத்தில் அவர்களுக்கு வேண்டியது ஒரு ஆதரவும், ஆலோசனையும் தான். மனநல ஆலோசனை வழங்க நீங்கள் தனியாக அலுவலகம் அமைக்க வேண்டியது என்பது இல்லை, ஆன்லைன் மூலமாகவே இதனை நீங்கள் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு