மனிதராக பிறந்த அனைவருக்குமே, கடமைகள், பொறுப்புகள் என நிறைய இருக்கின்றன. வயது ஏற ஏற, நமக்கு வாழ்வில் அனுபவம் கூடுகிறதோ இல்லையோ, தலையில் பொருப்புகள் மட்டும் அதிகம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஆணும் பெண்ணும் சமம் என்றாலும், இந்த சமூகம் ஆண்களை ஒரு மாதிரியும், பெண்களை ஒரு மாதிரியும்தான் வளர்க்கிறது. இதனால், இவருவருக்கும் வெவ்வேறு மாதிரியான பொருப்புகள் கைகளில் இருக்கின்றன. ஒரு ஆண், 27 வயதிற்குள் என்னென்ன வேலைகளை செய்து முடித்திருக்க வேண்டும் தெரியுமா?
1.தொழில் வளர்ச்சி:
27 வயதிற்குள், நீங்கள் தொழில் ரீதியாக எந்த நிலையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதையும், உங்கள் இலக்கு என்ன என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். அப்படி உங்கள் கையில் இருக்கும் தொழில் அனுபவமும் திறனும் போதவில்லை என்றால், விரைந்து திறன் பயிற்சிகளை மேற்கொள்ளவும், அனுபவத்தை பெறவும் முனைப்புடன் இருக்க வேண்டும்.
2.நிதி மேலாண்மை:
உங்களுக்கான பட்ஜெட்டை தொடங்குவது நல்லது. சரியான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் பணி ஓய்வு பெறும் சமயத்தில், உங்களுக்கு நீண்ட நால் பாதுகாப்பு தரும் பிளான்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
3.உடல் நலம்:
நம்முடன் கடைசி வரை வரப்போவது உடல் மட்டும்தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, உடல் நலனில் இளமையில் இருந்தே அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். சரியான டயட், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றை தினமும் பின்பற்ற வேண்டும். மேலும், உங்கள் மன அழுத்தத்தை சரியாக கையாள்வதும் சிறந்ததாகும்.
4.சரியான உறவுகள்:
27 வயதில், யார் உங்களிடம் பழகினாலும் அவர் எந்த நோக்கத்துடன் உங்களிடம் பழகுகிறார் என்பதை கண்டுகொள்ளும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும். காரணம், இந்த வயதில் நாம் பலரை கடந்து வந்திருப்போம், பலர் நம்மை முதுகில் குத்தும் நபராக இருந்திருப்பர். பலர், நமக்கு நெடுங்கால நண்பராக இருப்பர். எனவே, எடுத்தவுடன் யாருடனும் ஆரம்பத்திலேயே நெருங்கி பழகி விடக்கூடாது என்ற பக்குவத்தை இந்த வயதில் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை சுற்றி, உங்கள் நலனில் அக்கறை கொண்ட நபர்களையும், உங்கள் வெற்றியை பார்த்து மகிழ்ச்சியடையும் நபர்களை மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | 30 வயது ஆகிவிட்டதா? பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தோல் பராமரிப்பு குறிப்புகள்!
5.தனிப்பட்ட வளர்ச்சி:
நமக்கு 10 வயதில் தெரிந்த விஷயங்கள், 12 வயதில் வேறாக தெரியும், அதே விஷயம் 22 வயதில் வேறாக தெரியும். இந்த புரிதலை, தனிப்பட்ட வளர்ச்சி என்று கூறலாம். இந்த வளர்ச்சியும் புரிதலும் ஆண்களாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 27 வயதில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
6.பயண அனுபவங்கள்:
வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, நமக்கு விதவிதமான அனுபவங்கள் ஏற்படலாம். எனவே, இந்த இளம் வயதில் நன்றாக பயணங்கள் மேற்கொண்டு அனுபவங்களை பெற வேண்டும். இதனால், வாழ்வின் பல்வேறு பக்கங்களை நீங்கள் எட்டிப்பார்க்கலாம். பயணங்கள், எதிர்பாராத நல்ல உறவுகளையும் உங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கலாம்.
7.இலக்குகள்:
உங்கள் வாழ்வில் சாதிக்க விரும்பும் விஷயங்களையும், நீங்கள் அதை அடையும் பாதையில் தற்போது இருக்கிறீர்களா என்பதையும் அசை போட வேண்டும். அப்படி அந்த முன்னேற்ற பாதையில் நீங்கள் இல்லை என்றால், அதில் பயணிப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஆண்கள் ஏன் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ