பெண்களுக்கு தாய்மை பருவம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இந்த கட்டத்தில் பொறுப்புகளும், மகிழ்ச்சியும் கூடுகிறது. பெற்றோராக மாறுவது ஒரு பெண்ணுக்கு இனிமையான அனுபவம். மேலும் அதிக சுமைகளும் இதனுடன் கூடுகிறது. குழந்தையை வளர்க்க கணவன், மனைவி இருவரும் சின்ன சின்ன விஷயத்தில் கூட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முதன்முறையாக குழந்தை பெற்று இருந்தால் குழந்தையைப் பராமரிக்கும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக குழந்தைகளை கையாளும் போது அதிக கவனம் தேவைப்படுகிறது. அதிலும் கைக்குழந்தைகளை கையாளும் போது இன்னும் அதிக கவனம் தேவைப்படுகிறது. மேலும் பல சிரமங்களையும் இந்த சமயத்தில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
குழந்தைகளை பராமரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
சிறு குழந்தைகளுக்கு பலரும் காஜலை கண்களில் தடவுகின்றனர். வீட்டில் உள்ள பெரியவர்களும் இதனை அறிவுறுத்துகின்றனர். ஆனால் இது குழந்தைக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு கண்களில் காஜலை பயன்படுத்தினால் அது கண்ணீர் குழாய்களில் அடைப்புக்கு வழிவகுக்கும் என்றும், அதில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் கண்களில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, முடிந்தவரை குழந்தைக்கு காஜல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரு சிலர் பிறந்து நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆனா குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் மற்ற உணவுகளை கொடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஆனால் இது தவறு, ஆறு மாதங்கள் வரை குழந்தையின் ஊட்டச்சத்துக்கு தாயின் பால் மட்டுமே போதுமானது. பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சகஜம் தான் என்றாலும், நீண்ட நேரம் ஒரே டயப்பர்கள் இருக்கும் படி விட வேண்டாம். ஒவ்வொரு சில மணி நேரங்களுக்கும் டயப்பரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். டயபர்களுக்கு பதில் பருத்தியால் செய்யப்பட்ட துணிகளையும் பயன்படுத்தலாம்.
பிறந்த குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, பாடி வாஷ், எண்ணெய், லோஷன் போன்ற பொருட்களை பார்த்து பார்த்து வாங்க வேண்டும். இந்த பொருட்களில் காலாவதி தேதி, என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும். மேலும் சில பொதுவான விஷயங்களையும் பின்பற்ற வேண்டும். குழந்தைகளை தூக்கும் முன்பு, உங்கள் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதே போல வெளியாட்கள் யார் குழந்தைகளை தூக்கினாலும், சானிடைசர் பயன்படுத்த அறிவுறுத்துங்கள். குடும்பத்தில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.
மேலும் படிக்க | மணமகளை விட அதிகம் ஜொலித்த இஷா அம்பானி... அப்படி என்ன அவரின் காஸ்ட்யூமில் ஸ்பெஷல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ