புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பல ஆயுள் காப்பீட்டு பாலிஸி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அத்தகைய ஒரு பாலிஸி திட்டம் ஒன்றில், ஒரு நாளைக்கு ₹160 என்ற அளவில் முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு நேரத்தில் ₹ 23 லட்சத்துக்கு மேல் பாலிஸி பணம் கிடைக்கும். இந்தக் பாலிஸியின் பெயர் எல்.ஐ.சியின் புதிய மணி பேக் பாலிஸி (LIC New Money Back Policy).
ஐந்து ஆண்டுகளில் 20 சதவீத பாலிஸி தொகை கிடைக்கும்
இந்த LIC பாலிஸியில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடம் முடிவடைந்ததும் 15 முதல் 20 சதவீத தொகையை திரும்பப் பெறுவார்கள். இருப்பினும், மொத்த பிரீமியத்தின் 10% டெபாசிட் செய்யப்பட்டால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும். இதனுடன், முதலீட்டாளர்களுக்கு முதிர்வு காலத்தில் போனஸும் கிடைக்கும்.
ALSO READ | தீராத பிரச்சனையா... வீட்டின் படிக்கட்டு காரணமாக இருக்கலாம்... !!!
எல்.ஐ.சி மணி பேக் பாலிஸியில் (Money Back Policy)இரண்டு வகையான முதிர்வு காலம் உள்ளது. பாலிஸி எடுப்பவர் தனது தேவைக்கு ஏற்ப, 20 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். வருமான வரிக்கு ஏற்ப இந்தக் பாலிஸிக்கு முற்றிலும் வரி விலக்கு பெறலாம். இதனுடன், வட்டி, பிரீமியம் தொகை மற்றும் முதிர்வு காலம் ஆகியவற்றில் பெறப்பட்ட தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு. பாலிசிதாரர், 25 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு ₹160 என்ற அளவில் முதலீடு செய்தால் ₹23 லட்சம் கிடைக்கும்.
ALSO READ | தீராத பணப்பிரச்சனையை தீர்க்கும் எளிய வாஸ்து குறிப்புகள்..!!!
நீங்கள் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டு உறுதி தொகை - ஒரு லட்சம் ரூபாய்
அதிகபட்ச அடிப்படை காப்பீட்டு உறுதி தொகை - வரம்பு இல்லை
குறைந்தபட்ச வயது வரம்பு - 13 வயது
அதிகபட்ச வயது வரம்பு - 50 வயது
கால அளவு - 20 ஆண்டுகள்
முதல் ஆண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய ப்ரீமியம் தொகை
பிரீமியம் தொகையில் 4.5 சதவீத ஜிஎஸ்டி கட்டணமும் அடங்கும்.
ஆண்டு பிரீமியம்: ₹60,025 (₹57,440 + ₹2585)
அரை ஆண்டு பிரீமியம்: ₹30,329 (₹29,023 + ₹1,306)
காலாண்டு பிரீமியம்: ₹15,323 (₹14,663 + ₹660)
மாத பிரீமியம்: ₹5,108 (₹4,888 + ₹220)
தினசரி பிரீமியம்: ₹164
இரண்டாம் ஆண்டு பிரீமியம்
ஆண்டு பிரீமியம்: ₹ 58,732 (₹ 57,440 + ₹ 1,229)
அரை ஆண்டு பிரீமியம்: ₹ 29,676 (₹ 29,023 + ₹ 653)
காலாண்டு பிரீமியம்: ₹ 14,993 (₹ 14,663 + ₹ 330)
மாதாந்திர பிரீமியம்: ₹ 4,998 (₹ 4,888 + ₹ 110)
தினசரி செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை: ₹ 160
ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் பாலிசிதாரருக்கு ₹ 1.50 லட்சம் பணம் திரும்பப் கிடைக்கும். கூடுதலாக, முதலீட்டாளருக்கு போனஸாக ₹ 11 லட்சமும் கூடுதல் போனஸாக ₹ 2,25,000 கிடைக்கும்.
ALSO READ | தினம் ₹121 சேமித்தால் போதும்.. செல்ல மகளின் திருமணத்திற்கு கையில் ₹27 லட்சம் ..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR