Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா?

இந்த 3 ராசிக்காரர்கள் எதிரில் இருப்பவரை வசீகரிப்பதில் வல்லவர்கள், இவர்களின் தந்திரம் இப்படித்தான் இருக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2022, 07:24 AM IST
  • கவர்ச்சியான ராசிகள்!
  • எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி
  • பிறருடன் இணக்கமாக வாழும் ராசி
Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா? title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் சில பிரத்யேக சிறப்பு குணங்கள் உள்ளன. சில ராசிகள் அவற்றின் சிறப்புக் குணங்களால் வேறுபடுகின்றன. இந்த 3 ராசிகள், உறவினர்கள், மற்றும் நண்பர்களை ஈர்க்கும் ராசிகளாம்!  

கிரகங்களின் தாக்கத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்புகளும் வேறுபடும். சில ராசிக்காரர்களின் குணம் மக்களுடன் இணக்கமாக வாழ்வது என்றால், சில ராசிக்காரர்கள் யாருடனும் எளிதில் கலக்க மாட்டார்கள்...

சிலரோ எதிரில் இருப்பவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்கள். பிறரை தன்வசப்படுத்தும் ராசிகள் இவை தான். நீங்கள் என்ன ராசி?

தனுசு
ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு அப்பாவியாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் சலிப்பூட்டும் ஆளுமை கொண்டவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் மனதில் மிகவும் கூர்மையானவர்கள். 

இந்த ராசிக்காரர்கள் இனிமையான பேச்சால் மற்றவர்களை கவர்வார்கள். தனுசு ராசிக்காரர்கள் கவர்ச்சிகரமானவர்கள். இது தவிர இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: ஆடம்பர வாழ்க்கை வாழும் ‘4’ அதிர்ஷ்ட ராசிகள் 

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மிகவும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு புதிய வேலையையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள். கூட்டாளியின் கருத்தும் பரிந்துரையும் அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும், இந்த ராசிக்காரர்கள், தங்களுக்கு பிடித்தவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள். 

இது அவர்களின் மிகப்பெரிய தரம். ஆனால், மற்றவர்களால் ஏமாற்றப்படும்போது மனம் உடைந்து போய்விடுவார்கள். எனவே அவர்கள் மோசடி செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். தங்களுடைய கவர்ச்சியான திறன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை ஈர்க்கிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதில் வல்லவர்கள். இந்த ராசிக்காரர்கள் கூட்டத்திலும் கூட ஈர்ப்பு மையமாக மாறுகிறார்கள். அவர்கள் எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள். 

உறவைப் பேணுவதில் கெட்டிக்கார ரசி மிதுன ராசி. தங்களுடன் இணைந்தவர்களையும், நண்பர்களையும் மிகவும் நல்ல முறையில் நடத்துவார்கள். ஆனால்,, இந்த ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள். மற்ற்வர்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறக்கும் ‘3’ ராசி பெண்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News