இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்ல், மகன் ஆர்ச்சி ஆகியோர் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் (Christmas Greeting Card) அட்டையில் இடம்பெற்றுள்ளனர்.
"Wishing you a very Merry Christmas and a Happy New Year" என்று எழுதப்பட்ட இந்த அட்டையை லண்டனை தளமாகக் கொண்ட தி மேஹ்யூ அனிமல் ஹோம் (The Mayhew Animal Home) அறக்கட்டளை பகிர்ந்து கொண்டது, அந்த அறக்கட்டளையில் (Charity) ஹாரி வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் (Chirstmas) அட்டை வியாழக்கிழமை அறக்கட்டளையின் இன்ஸ்டாகிராம் (Instragram) கணக்கில் பகிரப்பட்டது.
We’re thrilled to receive wonderful Christmas wishes from our Patron, The Duchess of Sussex, who also made a personal donation, helping dogs, cats and our community. From all of us at Mayhew, thank you and Merry Christmas.
Find out more! https://t.co/5o2RHLveRM pic.twitter.com/uBV19F6Odt— Mayhew (@themayhew) December 23, 2020
ஒரு மினியேச்சர் வீட்டிற்கு வெளியே ஆர்ச்சியுடன் ஹாரியும் (Prince Harry), மேகனும் இருக்கின்றனர். அவர்களுடன் இரண்டு நாய்களும் இருக்கின்றன. அந்தப் படத்தில் சிவப்பு ரிப்பனுடன் கூடிய ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரமும் உள்ளது.
"இந்த ஆண்டு, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நாங்கள் ஒரு குடும்பமாக, பல தொண்டு நிறுவனங்களுக்கு (Charities) நன்கொடைகளை வழங்கியுள்ளோம்" என்று அந்த வாழ்த்து அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read | ஹாரி & மேகன் மார்கெல் திருமணம் முதல் Megxit வரை
"வீடற்ற நிலையில் இருந்து குடும்பங்களை பாதுகாக்க உதவும் ஒரு உள்ளூர் கலிபோர்னியா அமைப்பு, விலங்கு மற்றும் சமூக நலனை ஆதரிக்கும் அமைப்புக்கு உதவுகிறது. உகாண்டாவில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கும் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவும் ஒரு நேசத்துக்குரிய நண்பருக்கும் நிதியளிக்க விரும்புகிறோம். அனைவரின் சார்பாக அவர்களின் பணிகளை நாங்கள் கெளரவித்துள்ளோம்" தம்பதிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம் தனது முதல் பிறந்தநாளுக்குப் பிறகு குடும்பத்தின் அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டையில் ஆர்ச்சி இதுவே முதல் முறையாக இடம் பெறுகிறார். "குடும்பத்தின் அசல் புகைப்படம் இந்த மாத தொடக்கத்தில் அவர்களது வீட்டில் எடுக்கப்பட்டது.
"வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பிற அலங்காரங்கள் உட்பட சிறிய கிறிஸ்துமஸ் மரம் ஆர்ச்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டது, விடுமுறை நாட்களில் மரம் மீண்டும் நடப்படும்" என்று கூறப்படுகிறது.
Also Read | வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கேக் செய்யலாம் எப்படி தெரிந்துக் கொள்ளுங்கள்
மார்ச் மாதத்தில் அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிய பின்னர் ஹாரி குடும்பத்தினர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கின்றனர். இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த காமன்வெல்த் தின சேவையில் ஹாரி மற்றும் மேகன், இங்கிலாந்து அரசி ராணி மற்றும் பிற அரச குடும்பத்தினருடன் இணைந்து காணப்பட்டனர்.
அதன்பிறகு அவர்கள் அமெரிக்காவில் (America) சாதாரண மக்களாக புதிய வாழ்க்கையைத் தொடங்கி, சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோய் (Covid-19) பாதிப்பு இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சல்ஸில் வசிப்பவர்களுக்கு ப்ராஜெக்ட் ஏஞ்சல் ஃபுட் மூலம் ஹாரி உணவு வழங்கி வருகிறார். இந்த அமைப்பு நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு உணவளிக்க உதவுகிறது.
Also Read | Happpy Christmas 2020: உங்கள் மனம் கவரும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பட்டியல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR