How To Eat Garlic: பூண்டுக்கு பல நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த பூண்டு நோய்களுக்கான சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் பூண்டு சாப்பிட சரியான வழி தெரியும். ஆனால் தற்போது இது தொடர்பான சரியான புரிதல் இல்லாததால், தவறான முறையில் மக்கள் இதை உட்கொள்கின்றனர். இந்நிலையில் சரியான முறையில் பூண்டு எப்படி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பூண்டில் இருக்கும் சத்துக்கள் (Garlic Nutrients) :
பூண்டில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் உள்ளது. அதுமட்டுமின்றி செலினியம், கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
ஆரோக்கியத்திற்கு பூண்டு (how Garlic works on health) :
* சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும்.
* இத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
* பூண்டில் அலிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
* இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும்.
* இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு நன்மை பயக்கும்.
* நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | அடிமுட்டாள்களும் அறிவாளியாக மாறலாம்! ‘இதை’ செய்தால் போதும்..
பூண்டு சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை (Here Are 5 Right Way To Eat Garlic) :
* தினம் 1 பச்சை பூண்டு சாப்பிடுங்கள் (Eat Raw Garlic): தினமும் 1 பல் பச்சை பூண்டை சாப்பிட்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற இது சிறந்த வழியாகும்.
* உணவில் பூண்டை சேர்க்கவும் (cook food with Garlic for health benefits): பொதுவான உணவை சமைக்கும் போது அதில் பூண்டை சேர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பூண்டு பயன்படுத்தப்பட்டால். அதேபோல் இறைச்சி அல்லது டோஃபு போன்ற உணவுகளில் கட்டாயம் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.
* பூண்டு பொடியை பயன்படுத்தலாம் (Garlic powder for health benefits): பூண்டு பொடியை பல வழிகளிலும் நாம் பயன்படுத்தலாம். பாஸ்தா, சூப் மற்றும் பிற உணவுகளில் 1 பூண்டை தூள் செய்து சாப்பிடவும்.
* பூண்டு டீ (Garlic Tea): பூண்டை டீயாக செய்து எடுத்துக் கொள்வது அதன் கடுமையான வாசனையைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும். நான்கு பூண்டு பற்களை நசுக்கி அதை ஒரு கப் தண்ணீரல் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அதோடு 2 சிட்டிகை அளவு இலவங்கப்பட்டை பொடியும் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயதான தோற்றத்தை தாமதப்படுத்த இந்த 5 ஆயுர்வேத வைத்தியங்கள் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ