காதலர் தினம் 2022: இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான மனைவிகள், அட்டகாசமான காதலிகள்

Best Lover Zodiac Sign:காதல் என்பது அனைவரது வாழ்விலும் எட்டிப்பார்க்கும் ஒரு அற்புதமான விஷயமாகும். நம்மை சுற்றி உள்ள ஒவ்வொரு உறவையும் நாம் காதலிக்கிறோம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2022, 09:26 AM IST
  • ரிஷப ராசி பெண்கள் மிகவும் ரொமான்டிக்காக இருப்பவர்கள்.
  • கடக ராசிப்பெண்கள் தங்கள் உறவில் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.
  • துலா ராசிப் பெண்கள் முதல் பார்வையிலேயே பார்ப்பவர்களை ஈர்த்து விடுவார்கள்.
காதலர் தினம் 2022: இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான மனைவிகள், அட்டகாசமான காதலிகள் title=

காதலர்கள் தினம் வரவுள்ளது. காதல் என்பது அனைவரது வாழ்விலும் எட்டிப்பார்க்கும் ஒரு அற்புதமான விஷயமாகும். நம்மை சுற்றி உள்ள ஒவ்வொரு உறவையும் நாம் காதலிக்கிறோம். ஒவ்வொருவரிடமும் நாம் காட்டும் காதலின் பரிமாணம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவற்றினூடே இழைந்திருக்கும் காதல் ஒன்றுதான்.

உலகில் பிறந்த அனைவருக்கும், தங்கள் வாழ்க்கைத் துணை /  காதலன் / காதலி இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தன் காதலன் / காதலி, தன் மீது அளவு கடந்த ஆசை வைத்திருக்க வேண்டும், தன்னை மிகவும் நேசிக்க வேண்டும், தன்னை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். 

பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய காதலி, தன் மீது அன்பை பொழிபவளாக, தனக்காக நேரத்தை செலவிடும் பெண்ணாக, அரவணைக்கும் தாயாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவது வழக்கம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உங்கள் விருப்பப்படி ஒரு நல்ல துணையை கண்டுபிடிப்பது சற்று கடினமாகிவிட்டது. எனினும், ஜோதிட சாஸ்திரத்தில் இப்படிப்பட்ட இயல்புகளையுடைய 4 ராசி பெண்களை பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த ராசிப்பெண்கள் உங்கள் காதலியாக அமைந்துவிட்டால், ஆண்களுக்கு கொண்டாட்டம்தான்!! 

ரிஷபம்: ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசி பெண்கள் மிகவும் ரொமான்டிக்காக இருப்பவர்கள். இந்த பெண்களுக்கு காதல் வாழ்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுமட்டுமின்றி, இவர்கள் தங்கள் உறவில் முழுமையான நேர்மையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கும். தங்கள் வாழ்க்கைத் துணையிடம் அனைத்து வகையிலும் அனுசரித்து போவதில் இந்த பெண்கள் வல்லவர்கள்.

மேலும் படிக்க | வரும் வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும் 

கடகம்: கடக ராசிப்பெண்கள் தங்கள் உறவில் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், கடக ராசிப்பெண்கள் தங்கள் உறவை சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக இவர்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். 

துலாம்: துலா ராசிப் பெண்கள் முதல் பார்வையிலேயே பார்ப்பவர்களை ஈர்த்து விடுவார்கள். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பார்கள். இவர்களுடைய பாணியே இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இந்த ராசிக்கார பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசத் தயங்குவதில்லை. மற்றவர்களின் உணர்வுகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் இவர்கள். இவர்களிடம் சுயநல உணர்வையே காணமுடியாது. இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணைக்கு முழுமையான ஆதரவாக இருப்பார்கள். 

மகரம் : மகர ராசி பெண்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு தங்கள் துணையின் மகிழ்ச்சிதான் அனைத்துமே. இதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு தருணத்தையும் சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். வேடிக்கையான நகைச்சுவையில் நாட்டம் உள்ளவர்கள் இவர்கள். அனைத்து சூழலிலும், இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையின் தோளோடு தோள் சேர்த்து நிற்பார்கள். 

மேலும் படிக்க | மிக விரைவில் சூரிய பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அளவில்லா அதிர்ஷ்டத்தை தருவார் 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News