கிரெடிட் கார்டு மூலம் UPI பேமெண்ட் ... மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது  ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்ய முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2023, 10:31 AM IST
  • வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
  • UPI பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் பரிவர்த்தனை வரம்புகள் தொடரும்.
  • கிரெடிட் கார்டு விவரங்களை இணைத்து அதன் மூலம் UPI பேமெண்ட்களைச் செய்யலாம்.
கிரெடிட் கார்டு மூலம் UPI பேமெண்ட் ... மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!  title=

கூகுள் பே, பேடிஎம், போன் பே, பாரத் பே என பல தனியார் நிறுவனங்களின் மொபைல் வாலெட் அப்ளிகேஷன்களில் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) என்ற பணப் பரிவர்த்தனை முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சேமிப்புக் கணக்கு அல்லது டெபிட் கார்டு மூலம் யுபிஐ (UPI) முறையில் பணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது  ரூபே கிரெடிட் கார்டு மூலமும் யுபிஐ பேமெண்ட் செய்ய முடியும். இதன் மூலம் BHMI UPI, Google Pay, Phone Pe, Paytm போன்ற பேமெண்ட் ஆப் வைத்திருப்பவர்கள் அதில் கிரெடிட் கார்டு விவரங்களை இணைத்து அதன் மூலம் UPI பேமெண்ட்களைச் செய்யலாம்.

RuPay கிரெடிட் கார்டு மூலம் UPI பணம் செலுத்த விரும்பினால், கனரா வங்கி வணிகர்களுக்கு RuPay கிரெடிட் கார்டு மூலம் UPI கட்டணம் செலுத்தும் வசதியை தொடங்கியுள்ளது. இதன் மூலம், கிரெடிட் கார்டு மூலம் UPI பணம் செலுத்தும் வசதியை வழங்கும் நாட்டின் முதல் அரசு வங்கி என்ற பெருமையை கனரா வங்கி பெற்றுள்ளது. கனரா வங்கியின் இந்த வசதி வங்கியின் பிரபலமான ‘Canara AI1’ பேங்கிங் சூப்பர் செயலியில் கிடைக்கிறது. NPCI உடன் இணைந்து இந்த வசதியை தொடங்கும் முதல் பொதுத்துறை வங்கி கனரா வங்கி ஆகும்.

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் RuPay கிரெடிட் கார்டுகள் மற்றும் அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி வணிகர்களுக்கு UPI பணம் செலுத்த முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் கனரா வங்கி RuPay கிரெடிட் கார்டை தங்கள் UPI ஐடியுடன் இணைக்கலாம். இந்த பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண முறையின் மூலம், வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்வது மிகவும் எளிதாக இருக்கும் என்று வங்கி கூறுகிறது.

மேலும் படிக்க | ஜூலை மாதம் விடுமுறை பட்டியல்: அடுத்த மாதத்தில் 15 நாள் வங்கிகள் இயங்காது

இந்த சிறப்பு புதிய வசதி குறித்து, கனரா வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ கே.சத்யநாராயண ராஜு கூறுகையில், கிரெடிட் கார்டை இணைக்கும் செயல்முறை தற்போதுள்ள கணக்கு இணைக்கும் செயல்முறையைப் போலவே தான் என்றார். RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி UPI பணம் செலுத்துவதற்கு UPI பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும் பரிவர்த்தனை வரம்புகள் தொடரும்.

வாடிக்கையாளர்களுக்கு எளிதாக உள்ள வகையில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேலும் மேம்படுத்தும் மற்றும் UPI அடிப்படையிலான தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. RuPay கிரெடிட் கார்டின் பலன்களுடன் வாடிக்கையாளர்களுக்கு UPI இன் வசதியை மேம்படுத்தவே UPI இல் RuPay கிரெடிட் கார்டு ஒருங்கிணைப்பு என்று NPCI இன் MD & CEO கூறுகிறார்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கும்

UPI இல் கனரா வங்கியின் RuPay கிரெடிட் கார்டு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இது தவிர, வர்த்தக நிலையங்களில் பணம் செலுத்தும் விருப்பமும் கிடைக்கும். UPI உடன் RuPay கிரெடிட் கார்டின் ஒருங்கிணைப்பு வாடிக்கையாளர்கள் கடன் வசதியை பயன்படுத்தும் முறையை மாற்றுகிறது. மேலும் இது நாட்டில் டிஜிட்டல் கட்டண முறைக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தி வணிகர்களுக்கு மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்படுகிறது என்றும், ரூபே கிரெடிட் கார்டுகளை நபருக்கு நபர், கார்டுக்கு கார்டு அல்லது கேஷ்-அவுட் பரிவர்த்தனைகளுக்கு UPI செலுத்துவதற்கு பயன்படுத்த முடியாது என்றும் கனரா வங்கி கூறுகிறது.  பொருட்கள் எதையாவது வாங்குவதற்காக வணிகர்களுக்கு செலுத்தும் பணத்தை  UPI மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தலாம். தனிப்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்த முடியாது. கனரா வங்கி தவிர, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, பிஎன்பி நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்ட கிரெடிட் கார்டு வழங்கும் பல வங்கிகளும் யுபிஐ பேமெண்ட் வசதியையும் அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்த ரகசியங்களை வங்கிகள் ஒருபோதும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News