இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்!

கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடலை வெளியாகி உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2024, 10:41 PM IST
  • தர்சன் நடித்துள்ள ஆல்பம் பாடல்.
  • கார்த்திக் ஶ்ரீ இந்த பாடலை இயக்கி உள்ளார்.
  • சரிகமா நிறுவனம் இந்த பாடலை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களை கொள்ளை கொள்ளும் எண்ட ஓமனே ஆல்பம் பாடல்! title=

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. 

மேலும் படிக்க | கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..

அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது. கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,  கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட  பின்னணியில், வண்ணங்கள் பொழியும் அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் ஶ்ரீ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார்.  இசையமைப்பாளர் S கணேசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.  கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தினை R கிஷோர் செய்துள்ளார். பாடலின் நடனத்தை அஸார் வடிவமைத்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது. இந்த பாடலில் தர்ஷன், அஞ்சு குரியன், ஸ்ருதி செல்வம், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு
கரு உருவாக்கம் & இயக்கம்: கார்த்திக் ஸ்ரீ.
இசை: கணேசன் S.
ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார்.
நடன அமைப்பாளர்: அஸார்.
கலை இயக்குனர்: கிஷோர் R.
எடிட்டர்: ஆஷிஷ் ஜோசப்.
பாடல் வரிகள்: விக்னேஷ் ராமகிருஷ்ணா.
பாடகர்கள் : சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன்.
 கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: நவீன் வரதராஜன்.
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா.
ஸ்டில்ஸ்: சிவா.
விளம்பர வடிவமைப்பாளர் – கார்த்திக் ராஜா
கலரிஸ்ட் – ராஜ ராஜன்
தயாரிப்பாளர்கள்: கார்த்திக் ஸ்ரீ, ஐஸ்வர்யா சுப்ரமணி, மகாலட்சுமி சம்பத்.
நிர்வாக தயாரிப்பாளர்: சரவண குமார். கார்த்திக் அண்ணாமலை.

மேலும் படிக்க | பொய்யான செய்தி பரப்ப வேண்டாம்! வலைப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருப்பதி பிரதர்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News