ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வரும் நிலையில், இதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியருக்கு அடிப்பட்டு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா..!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ஜெயிலர். இதற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத், இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. இதையடுத்து, படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், தமன்னா மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து காெள்ள இருக்கின்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
மேலும் படிக்க | மிஸ்கின் போல திறமையானவர் ; 'வெப்' இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு
ஊழியருக்கு காயம்..!
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளதை தொடர்ந்து இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அலங்கார நிகழ்ச்சிகள் அமைக்கும் பணிகளிலும் சிலர் வேலை செய்து வருகின்றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த சங்கர் மாலா என்ற 26 வயது இளைஞரும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு மின்சாரம் தாக்கி இவர் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு படுகாயம் ஏற்படுத்துள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் இவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘காவாலா’ பாடல் ரிலீஸ்!
ஜனி மாஸ்டரின் நடன இயக்கத்தில் தமன்னாவின் அசத்தில் அசைவுகளில் வெளியாகியிருந்த பாடல், காவாலா. இந்த பாடல்தான் தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோ/ஆடியோக்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார், அனிருத் இசையமைத்திருந்தார். 2 வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த இந்த பாடல், தற்போது 72 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இந்த பாடல், சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியிடப்பட்டது. இன்று, காவாலா பாடலின் இந்தி வர்ஷன் ரிலீஸாக உள்ளது. இதற்கு Tuadilbara என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜூஜூபி பாடல் எப்படி..?
ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிளான Jujubee நேற்று வெளியாகி இருந்தது. ‘ஹுக்கும்’ பாடலுக்கு வரிகள் எழுதிய சூப்பர் சுப்பு, இந்த பாடலுக்கு எழுதியிருந்தார். தீ-யின் குரலில் அனிருத்தின் பின்னணி இசையில் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. பிற இரண்டு பாடல்களை போல இந்த பாடல் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ரஜினிக்கு ஏற்ற வகையில் பாடல்கள் இல்லை என்றும் இதெல்லாம் ஒரு பாட்டா என்றும் ரசிகர்கள் இணையம் முழுவதும் புலம்பி தள்ளினர்.
படக்குழு:
ஜெயிலர் படத்தில் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாரை தவிர இன்னும் சில ஸ்டார் நடிகர்களும் இருக்கின்றனர். மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் என்றழைக்கப்படும் மோகன் லால் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் நடித்துள்ளார். எல்லா நெல்சன் திலீப் குமாரின் படங்களிலும் வரும் ரெடின் கிங்கஸ்லி உள்பட பிற நகைச்சுவை நடிகர்கள், இந்த படத்திலும் இடம் பிடித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ