பிரசாந்த் நீல் இயக்கத்தில் அண்மையில் வெளியான கேஜிஎப்2 திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தி பான் இந்தியா வெற்றிப் படமாக மாறியது. ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு நிகராக கேஜிஎப் 2 படத்தின் வெற்றியையும் ரசிகர்கள் கொண்டாடினர். நடிகர் யாஷ் ராக்கி பாயாக வாழ்ந்திருந்தார்.
மேலும் படிக்க | Vikram: நள்ளிரவில் களைகட்டிய தியேட்டர்கள் - ஆடிப்பாடி மகிழ்ந்த ரசிகர்கள்
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்த நிலையில், அந்தப் படத்துக்கு பின்னால் ரிலீஸான கேஜிஎப் 2 திரைப்படமும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்தது. தமிழகத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்துடன் கேஜிஎப் 2 ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால், தியேட்டர்கள் பிரச்சனை காரணமாக கேஜிஎப் 2 வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே பீஸ்ட் வெளியானது. வசூல் ரீதியாக பீஸ்ட் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், கேஜிஎப் 2 புதிய மைல்கல்லை எட்டியது.
மாற்று மொழிப் படமாக இருந்தாலும், கதை நன்றாக இருக்கும்பட்சத்தில் ரசிகர்கள் கொண்டாட தயாராக இருக்கின்றனர் என்பதை ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் 2 படங்கள் பொட்டில் அடித்தாற்போல் திரைத்துறையினருக்கு எடுத்துக் காட்டியது. தியேட்டர்களில் பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் போலவே அமேசான் பிரைமில் கேஜிஎப் 2 ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், ஓடிடியிலும் கட்டணம் செலுத்த வேண்டும் என அமேசான் கூறியது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்த நிலையில், இப்போது முழுவதுமாக இலவசமாக பார்க்கலாம் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. உங்களிடம் அமேசான் பிரைம் அக்கவுண்ட் இருந்தால், கட்டணம் இல்லாமல் கேஜிஎப் 2 படத்தை இப்போது நீங்கள் பார்க்க முடியும்.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் சம்பவம்! விக்ரம் திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR