தவெக கொள்கை பாடலை பாடியவர் யார் தெரியுமா?

Tamilaga Vettri Kazhagam Ideology Song Singer : நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கரவாண்டியில் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது.   

Written by - Yuvashree | Last Updated : Oct 27, 2024, 05:20 PM IST
  • தவெக கொள்கை பாடல்
  • பாடியது யார்?
  • விஜய்யும் கோரஸில் பாடுகிறார்
தவெக கொள்கை பாடலை பாடியவர் யார் தெரியுமா?  title=

Tamilaga Vettri Kazhagam Ideology Song Singer : சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து கொடியை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய அவர் கூடவே ‘தமிழன் கொடி பறக்குது’ பாடலை வெளியிட்டார். அதே போல, மாநாட்டில் கட்சியின் கொள்கை பாடலை வெளியிட்டிருக்கிறார்.

தவெக கொள்கை பாடல்:

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடி பாடலை, பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். தமன் இசையில் அமைந்திருந்த இந்த பாடலை தீபக் என்பவர் பாடினார். இப்பாடல், விஜய்யின் பிற திரைப்பட பாடல்களை பாேல பெரிய ஹிட் அடித்தது. அதே போல, தற்போது கொள்கை பாடலும் வெளியாகி இருக்கிறது. 

இந்த பாடலை, பிரபல தமிழ் ராப் பாடகர் அறிவு பாடியிருக்கிறார். “பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் கொள்கையுடன் தொடங்கும் இந்த பாடலில், இடையில் நடிகர் விஜய்யின் வாய்ஸும் வருகிறது. அதில் அவர், தந்தை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பலரை போற்றும் வகையில் பேசியிருக்கிறார். கடைசியில் அவரே “தமிழக வெற்றிக்கழகம்” என கோரஸில் பாடலும் பாடுகிறார். 

TVK Song

கொள்கைகள்..

பாடலில் கூறியது போலவே, தமிழகத்தை ஊழல் மற்றும் போதை இல்லா மாநிலமாக மாற்றுவோம், கரைபடியாத அரசியல் ஆட்சி அமைப்போம் உள்ளிட்ட பல கொள்கைகளை, தவெக கட்சியின் தொண்டர் சம்பத் படித்தார். 

விக்கரவாண்டியில் பெரிய மாநாடு!!

நடிகர் விஜய் நடித்தும் முதல் மாநாடு, விக்கரவாண்டியில் நடைபெறும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கினர் கட்சியின் நிர்வாகிகள். இறுப்பினும், நடிகர் விஜய் நேற்று இரவு நேரிலேயே வந்து பணிகளை களத்தில் இறங்கி ஆய்வு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இன்று காலை அவர் புதுச்சேரியில் இருந்து விக்கிரவாண்டிக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. 

சுமார் 5 லட்சம் பேர் கூடியிருக்கும் இந்த மாநாட்டில், தண்ணீர் பாட்டில்கள் குறைவாக இருப்பதாகவும் பலர் மயக்கும் போட்டு விழுந்ததாகவும் கூறப்பட்டது. சுமார் 3 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த விழாவைக்காண நேற்று முதலே மக்கள் திடலில் கூட ஆரம்பித்து விட்டனர். 2005ஆம் ஆண்டில் விஜயகாந்த் கூட்டியது போல, மிகப்பெரிய மாநாடாக விஜய்யின் முதல் மாநாடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயகாந்தை விட விஜய்க்கு கூட்டம் குறைவாகவே வந்திருக்கிறது. 

மேலும் படிக்க | தவெக மாநாட்டு திடலை சுற்றி சிகரெட் பீடி விற்பனை ஜோர், மது பாட்டிலோடு கும்மாளம்

மேலும் படிக்க | ஒருமணி நேரம் முன்னதாகவே தொடங்கும் தவெக மாநாடு: திடீர் மாற்றம் ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News