கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி

கன்னட நடிகர்-தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் ரமணஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2021, 01:51 PM IST
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி title=

பெங்களூரு: கன்னட நடிகர்-தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் ரமணஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 46 வயதான நடிகரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மருத்துவமனை செல்லும் பாதையில் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மூத்த நடிகர் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். 29 படங்களில் முன்னணி நடிகராக இருந்துள்ளார். குழந்தை நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். வசந்த கீதா (1980), பாக்யவந்தா (1981), சாலிசுவ மொதகலு (1982), ஈரடு நட்சத்திரங்கள் (1983), பக்த பிரஹலாதா, யாரிவானு மற்றும் பெட்டடா ஹூவு (1985) ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்ற படங்களாகும். பேட்டடா ஹூவு படத்தில் ராமு என்ற கதாபாத்திரத்திற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News