தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் முந்தைய எபிசோட்டில் மகாலட்சுமி திட்டம் போட்டி சேது, ராம் மற்றும் துரை என மூவரையும் கேரளாவுக்கு சிகிச்சைக்காக செல்ல சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மகாவின் திட்டத்தின் படி இவர்கள் மூவரும் கேரளாவுக்கு கிளம்பி செல்கின்றனர். அதன் பிறகு அன்று இரவு சீதா ராமை மிகவும் மிஸ் செய்து அவனுக்கு போன் போட்டு பேச இருவரும் ஒருவரை ஒருவர் செய்து கொள்வதாக ரொமான்டிக்காக பேசி கொள்கின்றனர்.
மறுநாள் சேது போன் போட்டு மகாவிடம் பேச அவள் இங்கு எல்லாம் நல்லபடியா போய்ட்டு இருக்கு நீங்க எவ்வளவு நாள் ஆனாலும் சிகிச்சையை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க என்று பேசி போனை சீதாவிடம் கொடுக்க அவளும் இதே போல் சொல்கிறாள்.
மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன?
அதற்கு அடுத்ததாக மகாலட்சுமி கூட்டம் போட்டு இது தான் சீதாவை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம் என பிளான் போடுகின்றனர். பிறகு சீதா பஜனை பாடி பூஜை செய்து கொண்டிருக்க அங்கு வரும் மகா இது என்ன வீடா இல்ல பஜனை மண்டபமா என சத்தம் போடுகிறாள் மகாலட்சுமி.
அதுமட்டுமின்றி எதிர்த்து பேசும் சீதாவை மகாலட்சுமி பளாரென அறைகிறாள். இதனால் சீதா வருத்தமாக இருக்க செல்வி ராம் சாருக்கு விஷயத்தை சொல்லிடுங்க என்று சொல்ல சீதா வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | பிக்பாஸ்7 : டபுள் எவிக்ஷனில் வெளியேறிய பிராவோ-அக்ஷயா! வாங்கிய சம்பளம் எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ