அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியும் நடிக்கிறார். மேலும் லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இவர்களுடன் படத்தில் எஸ்ஜே சூர்யா, ஆர்ஜே விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் டான் (Don) படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
ALSO READ | சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். முன்னதாக விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி அறிவித்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் டான் படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யாவின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது டான் படத்தின் மற்றொரு முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். அதன்படி அடாது மழையிலும் விடாது டப்பிங் செய்து முடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டான் படம், தனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அடாது மழையிலும் விடாது டப்பிங்Completed my dubbing for #DON
Lots of emotions,revisited my college days,Loved this journey pic.twitter.com/WJS3rloBpX— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 9, 2021
முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டாக்டர் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வசூல்ரீதியாகவும் இந்தப் படம் வெற்றிப் பெற்றுள்ளது. தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 5 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'செல்லம்மா' பாடல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR