Veera Simha Reddy Review : காற்றில் பறக்கும் எதிரிகள்.. வீர சிம்ஹா ரெட்டி படம் ரிவியூ!

Veera Simha Reddy Twitter Review: தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கு டிவிட்டரில் விமர்சனங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 12, 2023, 03:15 PM IST
  • எதிரிகளை காற்றில் பறக்கவிடும் பாலகிருஷ்ணா.
  • நடிகை மார்பில் சிகரெட் போட்டுப் பிடிக்கும் காட்சி.
  • பாலய்யா நடித்துள்ள 'வீர சிம்ஹா ரெட்டி'.
Veera Simha Reddy Review : காற்றில் பறக்கும் எதிரிகள்.. வீர சிம்ஹா ரெட்டி படம் ரிவியூ! title=

Veera Simha Reddy Movie Review : தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள 107வது திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில், டிவிட்டரில் படம் குறித்து விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்க | குடும்பங்கள் கொண்டாடும் ‘வாரிசு’ படத்தின் வசூல் என்ன? அப்செட்டில் விஜய் ரசிகர்கள்?

படத்தின் கதை:
ஜெயசிம்ஹா ரெட்டி தனது தாயார் மீனாட்சியுடன் இஸ்தான்புல்லில் வசித்து வருகிறார். அவர் ஈஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ராயலசீமாவில் வசிக்கும் புலிச்சார்லாவை ஆளும் ஜெயாவின் தந்தை வீர சிம்ம ரெட்டியின் அடையாளத்தை மீனாட்சி வெளிப்படுத்துகிறார். பானுமதியும் பிரதாப் ரெட்டியும் கடந்த 30 ஆண்டுகளாக வீர சிம்ம ரெட்டியைக் கொல்ல முயர்ச்சிக்கின்றார்கள். வீராவை ஏன் கொல்ல நினைக்கிறார்கள்? பானுமதி யார்? வீர சிம்ம ரெட்டி தனது மனைவி மற்றும் மகனை விட்டு பிரிந்தது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் படத்தில் பதில் கிடைக்கும்.

ட்விட்டர் ரியாக்சன்:

மேலும் படிக்க | பிரபல இளம் நடிகருடன் காதலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News