இன்று உலக இசை நாள். இந்த நாளில் இசையை பற்றியும் அவை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் பல பேசி வருகின்றனர். பல தமிழர்கள் இசைஞானி இளையராஜாவில் ஆரம்பித்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வரை அனைவரையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதில், சில பாடல்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்தவர்களை உண்மையாகவே மீட்டெடுத்துள்ளது. அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?
ஒவ்வொரு பூக்களுமே..ஆட்டோகிராஃப்:
சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், ஆட்டோகிராஃப். ஒரு மனிதன், தன் வாழ்வில் எந்தெந்த கட்டத்தில் எல்லாம் இன்னல்களை அனுபவிக்கிறானோ அத்தனை இன்னல்களையும் அனுபவிப்பான் இப்படத்தின் ஹீரோ. மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் இவனுக்கும் இவனது நண்பர்களுக்கு தூண்டுகோலாக அமைவதுதான், ஒவ்வொரு பூக்களுமே பாடல். இந்த பாடல், அப்படத்தின் ஹீரோவிற்கு மட்டுமல்ல, தர்கொலை எண்ணத்தில் இருந்தவர்கள், வாழ்வில் அனைத்தையும் இழந்தவர்கள் என அனைவரையும் மீட்டெடுத்தது. இந்த பாடலின் கடைசியில் வரும் குழலோசை அனைவருக்கும் ஃபேவரட். இதன் இசையமைப்பாளர், பரத்வாஜ்.
மேலும் படிக்க | ’வேற மாறி வேற மாறி..’ ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனிற்கு பிறந்தநாள் இன்று..!
ஒரு நாளில்-புதுப்பேட்டை:
தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம், புதுப்பேட்டை. இதை செல்வராகவன் இயக்கி இருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு நாளில் பாடல் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், படத்தின் நீளம் காரணமாக இப்பாடல் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தனியாக இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பலருக்கு மோட்டிவேஷன் ஆக அமைந்துள்ளது. பலரும், இந்த பாடலை கேட்டதில் இருந்துதான் தனக்கு வாழ்க்கையில் போராடும் சக்தி கிடைத்ததாக கூறுவதுண்டு.
சரிகமே-பாய்ஸ்:
2003ஆம் ஆண்டு சித்தார்த், ஜெனிலியா, நகுல், பரத், தமன் உள்ளிட்ட பலரை வைத்து ஷங்கர் இயக்கி இருந்த படம், பாய்ஸ். வாழ்க்கை முழுவதும் பெற்றோர்களால் “உருப்படமாட்ட..” என்று திட்டி தீர்க்கப்படும் இளவட்ட பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து சக்ஸஸ் அடைவதுதான் படத்தின் கதை. இதில் , க்ளைமேக்ஸ் பாடலாக வருவதுதான் “சரிகமே..” பாடல். “வலிதான் வெற்றியின் ரகசியமே..” என மனவலியால் துடித்துக்கொண்டிருந்த பலருக்கு தனது இசையால் மருந்து போட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவையெல்லாம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னாள் வந்த மோட்டிவேஷனல் பாடல்கள்...இப்போது இளசுகளுக்கு பிடித்த பாடல்கள் கொஞ்சம் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
கையில ஆகாசம்-சூரரைப்போற்று:
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த படம், சூரரைப்போற்று. தன்னுடையை கனவை இறுதியில் அடையும் ஹீரோவின் உணர்ச்சிகளே இந்த பாடல். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இப்பாடல் உருவாகியிருந்தது. இதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. இது, தற்போதைய 2 கே கிட்ஸின் “ஜெயிச்சிட்டோம் மாறா..” பாடலாக இருக்கிறது.
தல கோதும் இளங்காத்து..ஜெய்பீம்:
இந்தியா முழுவதும் பெரிதாக பேசப்பட்ட ஜெய் பீம் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் தல கோதும் இளங்காத்து. இதில் வரும் சென்கேனிக்கு மட்டுமல்ல, பலரின் கண்ணீரையும் இப்பாடல் துடைத்தது. சியான் ரோல்டன் இசையில் பிரதீப் குமார் இப்பாடலை பாடியிருந்தார்.
இதுவும் கடந்து போகும்..நெற்றிக்கண்:
நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த நெற்றிக்கண் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் “இதுவும் கடந்து போகும்..” காதல் தோல்வியில் விழுந்து எழுந்தவர்கள், வாழ்வில் கடினமான கட்டத்தை எதிர்கொண்டவர்கள், அன்புக்குரியோரை இழந்தவர்கள் என பலரை இந்த பாடல் குணப்படுத்தியது. இதை கேட்கும் போது “இதுவும் கடந்து போகும்” என்ற எண்ணம் தங்களை ஆறுதல் படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். சித் ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ